2 நிமிடத்தில் அரிசி, சக்கரை ஸ்மார்ட் கார்டாக மாற்ற சூப்பர் சான்ஸ்.! எப்படி தெரியுமா.?

First Published | Oct 2, 2024, 9:29 AM IST

தமிழகத்தில் சக்கரை அட்டை மற்றும் உணவு பொருட்கள் இல்லாத அட்டைதாரர்கள் அரசின் சலுகைகளை பெற முடியாது என்பதால், தங்களது குடும்ப அட்டைகளின் வகையை மாற்றுவதற்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இணைய தளம் வழி பதிவு செய்யலாம்.

ரேஷன் கடையில் மானிய விலையில் உணவு பொருட்கள்

அரசின் சலுகைகளை பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கிய ஆதாரமாக உள்ளது. இது மட்டுமில்லாமல் ரேஷன் கடையில் மானிய விலையில் உணவு பொருட்கள் பெறுவதற்கும் ரேஷன் கார்டுகள் தேவைப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 119 மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளன. இவர்களின் வருமானத்தைப்பொறுத்து ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இளஞ்சிவப்பு அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிக மானியம் கிடைக்கிறது. வெள்ளை அட்டைதாரர்கள்  மானிய விலையில் உணவு தானியங்களை வாங்கலாம். ஆனால் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்குக் கிடைக்கும் சில அதிக மானியப் பொருட்களுக்குத் தகுதி பெற மாட்டார்கள்.பச்சை அட்டையானது  அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.

ration shop

ஸ்மார்ட் கார்டு வகைகள்

மிக உயர்ந்த மானியங்களை வழங்குகிறது. அத்தியாவசியப் பொருட்களை மிகக் குறைந்த விலையில் வழங்குகிறது.இதே போல நீல அட்டை, கோதுமை அட்டை என பல வகைகள் உண்டு. ஆனால் தமிழகத்தில் பெரும்பாலும் அரிசி அட்டை, சக்கரை அட்டை, பொருட்கள் வாங்காத அட்டைகள் மட்டுமே உள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் சக்கரை அட்டை மற்றும் உணவு பொருட்கள் இல்லாத அட்டைதாரர்கள் அரசின் சலுகைகளை பெற முடியாது.

எனவே ரேஷன் அட்டையின் தரத்தை மாற்ற பல வகையிலும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக தமிழ்நாட்டில் 5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. அவை PHH, PHH-AAY, NPHH, NPHH-S,NPHH-NC என்று 5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன.
அவர்களுக்கு உதவிடும் வகையில் தங்களது குடும்ப அட்டைகளின் வகையை மாற்றுவதற்கு ஒரே நிமிடத்தில் இணைய தளம் மூலம் பதிவு செய்யலாம்.

Latest Videos


Ration Shop

அட்டை வகையை மாற்றலாமா.?

இதற்காக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான TNPDS என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும்.  அங்கு பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருக்கும். அதில் நடுவில் தங்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொருட்கள் தேவை இல்லை என்றால் தங்களது அட்டையை பொருட்கள் இல்லாத அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கும்.  மேலும் தங்களது  அட்டை வகையை மாற்ற இங்கே கிளிக் செய்யவும் எனவும் ஒரு வாசகம் இருக்கும்.  அதனை கிளிக் செய்தால் அடுத்த பக்கத்திற்கு செல்லும். அங்கு ஏற்கனவே நியாயவிலைக்கடையில் கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன் கீழ் இருக்கும் கேப்ட்சாவை பதிவு செய்த பிறகு உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும்.  அதனை பூர்த்தி செய்தால். குடும்ப அட்டை மாற்றம் தொடர்பான பக்கத்திற்கு செல்லும். 

குடும்ப அட்டை புகார் தெரிவிக்க

அங்கு அட்டை தொடர்பான சேவைக்கு என்கின்ற பக்கம் ஓபன் ஆகும். அதில் தற்போது நம்மிடம் உள்ள குடும்ப அட்டையின் தலைவரின் பெயர் இடம் பெற்று இருக்கும். இதனையடுத்து குடும்ப அட்டை எண், நியாய விலை கடை குறியீடு போன்றவையும் இருக்கும். அதன் கீழே அட்டை வகை மாற்றம் என்கிற பெயர் இருக்கும். மேலும் அதில் குடும்ப அட்டை முடக்கவும், தடை நீக்கம் செய்வதற்கும், முகவரி மாற்றத்திற்கும் என பல காலங்கள் இருக்கும். ஆனால் அதில் அட்டவகை மாற்றம் என்ற காலத்தை மட்டும் குறிக்க வேண்டும்.

பண்டகம் இல்லாத அட்டை மாற்ற


அதற்கு  கீழாக அட்டை வகை மாற்றம் என்ற வாசகம் இருக்கும். அதில் தற்போதைய அட்டை வகை சக்கரை  அட்டையாக இருந்தால் சக்கரை அட்டை என பதிவு செய்யப்பட்டிருக்கும். அரசி அட்டையாக இருந்தால் அரிசி அட்டை என பதிவு செய்யப்பட்டிருக்கும். பண்டகம் இல்லாத  அட்டை என்றால் பண்டகம் இல்லாத அட்டை என பதிவு செய்யப்பட்டிருக்கும்.

அதற்கு அருகிலேயே புதிய வகை அட்டையை தேர்ந்தெடுக்கவும் என்ற வாசகம் இருக்கும். அதன் கீழ் இருக்கும் அம்புக்குரியை  கிளிக் செய்வதன் மூலம் பண்டகம் இல்லாத அட்டை, சக்கரை அட்டை என வாசகம் இருக்கும் அதில் நமக்குத் தேவையானதை நிரப்பி கொண்டு அதன் கீழ் இருக்கும் பகுதியை ஓகே செய்ய வேண்டும். இதனையடுத்து இந்த தகவல்களை உணவு பொருட்கள் வழங்கல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதும் ரேஷன் கார்டு வழங்கப்படும். 
 

ration shop

அரிசி அட்டையாக மாற்ற முடியாது

குடும்ப அட்டை மாற்றம் தொடர்பான தகவல்கள் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.  இந்தநிலையில் சக்கரை மற்றும் பண்டகம் இல்லாத அட்டைகளை அரிசி வாங்கும்  அட்டையாக மாற்ற முடியாது. இதனை ஒரு சில நேரங்களில் பிளாக் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். அரிசி அட்டையில் இருப்பவர்கள் மட்டுமே சக்கரை அல்லது பண்டகம் இல்லாத அட்டையாக மாற்ற முடியும்.  இதே போல சக்கரை அட்டை தாரர்கள் உணவு பொருட்கள் வேண்டாம் என்ற காலத்திற்கு மாற முடியும். எனவே தமிழக அரசு குடும்ப அட்டையை அரிசி அட்டையாக  மாற்றுவது தொடர்பாக அறிவிப்பை விரைவில் வெளியிடும் எனவும் அப்போது தங்களது ஸ்மார்ட் கார்டை அரசி அட்டையாக மாற்றிக்கொள்ள முடியும் என உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

click me!