தீபாவளி சர்ப்ரைஸ்: ஊழியர்களுக்கு டபுள் போனஸ் வழங்கும் தமிழக அரசு? தீயாக பரவும் குட் நியூஸ்

First Published | Oct 2, 2024, 8:29 AM IST

தீபாவளி பண்டிகை இம்மாத இறுதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஊழியர்களுக்கு இரட்டை தீபாவளி போனஸ் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது ஊழியர்களுக்கு அரசு சார்பில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகின்ற 31ம் தேதி தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக போனஸ் வழங்குவது தொடர்பான ஆலோசனையில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட வேண்டும். ஆனால் 12 முதல் 14 சதவீதம் வரை போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டது.

Tap to resize

அரசின் இந்த அறிவிப்பால் சுமார் 16 லட்சம் ஊழியர்கள் பயன்பெற்ற நிலையில், அரசுக்கு 2846.16 கோடி கூடுதல் பணச்சுமை ஏற்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது. ஒரு வருடத்திற்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் தமிழகத்தில் தற்போது மிண்டும் அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளது. இரண்டாவது அகவிலைப்படி இந்த மாதமே வழங்க அரசு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

government employees

மேலும் போக்குவரத்து சங்கங்கள் சார்பாக அகவிலைப்படியை உயர்த்தக் கோரி கடிதம் வழங்கப்பட்டு உள்ளது. தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட இந்த கடிதத்தின் மீது அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் சொல்லப்பட்டது. இதனால் ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் தீபாவளி போனஸ் ஒரே தவனையாக ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Latest Videos

click me!