பெண் குழந்தைகளுக்கு ரூ. 50,000 சொளையா; இப்பவே அப்ளை செய்யுங்க அள்ளிட்டு போங்க!

First Published Oct 7, 2024, 3:12 PM IST

தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் ரூ.50,000 வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. தகுதி, விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண் குழந்தைகள் குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறும் பொருட்டு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 

சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் குழந்தைகளுக்கான வைப்பு தொகையை அரசே செலுத்தும். குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்த உடன் முதிர்வு தொகையை விண்ணப்பித்து பெற்று கொள்ள முடியும். 

இந்த திட்டத்தின் படி ஒரு பெண் குழந்தை மட்டுமிருந்தால் தலா ரூ.50,000, இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 என வழங்கப்படுகிறது. 18 வயது நிறைவடைந்த பின்னர் இந்த திட்டத்தின் முதிர்வு தொகை மற்றும் வட்டி தொகை உடன் சேர்த்து பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. 

2-வது குழந்தை பிறந்து 3 வருடங்களுக்குள் இருந்தால் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும். குழந்தையின் தாயார் 35 வயதுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72000 வரை இருக்க வேண்டும். அதற்கான வருமான சான்றிதழும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இருப்பிட சான்று மற்றும் ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்றுகளையும் பெற்று சமர்பிக்க வேண்டும். 
 

Latest Videos


மேலே குறிப்பிட்ட சான்றுகளுடன் தகுதியான அனைத்து பயனாளிகளும் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் அல்லது மண்டல அலுவலகங்களில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். அல்லது மாவட்ட ஆட்சியருடனும் விண்ணப்பத்தை சமரிப்பிக்லாம். 

முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் ஏற்கனவே விண்ணப்பித்து, வைப்பு நிதி பத்திரம் பெற்றுள்ள பயனாளிகளில் 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் முதிர்வு தொகையை பெற விண்ணப்பிக்க வேண்டும்.
 

சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் அல்லது மண்டல அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவு அலுவலர் அல்லது மகளிர் ஊர்நல அலுவலரிட உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். 

முதிர்வு தொகையை பெற தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட ரசீது நகல், 10-வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கிக்கணக்கு புத்தக நகல், பயனாளியின் புகைப்படம் ஆகியவற்றை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் சமூக நல விரிவாக்க அலுவலர் அல்லது மகளிர் ஊர்நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

click me!