Government Employees : அரசு ஊழியர்கள் கைல எவ்ளோ காசு எடுத்துட்டு போலாம் தெரியுமா?

Published : Aug 28, 2026, 12:06 PM IST

Government Employees : பணியில் இருக்கும் அரசு ஊழியர் தன்னுடன் எவ்வளவு ரொக்கப் பணம் வைத்திருக்கலாம் என்பதற்கு தமிழகம் முழுவதும் பொதுவான விதிமுறை உள்ளதா? மதுரை உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் பின்னணி என்ன?

PREV
15
அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?

அரசு அலுவலகத்தில் பணியில் இருக்கும் ஊழியர் தனது பாக்கெட்டில் எவ்வளவு ரொக்கப் பணம் வைத்திருக்கலாம்? இதற்கு ஏதாவது உச்சவரம்பு இருக்கிறதா?

இந்தக் கேள்வியை மதுரை உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் எழுப்பியுள்ளது. பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் வைத்திருக்கக்கூடிய ரொக்கப் பணத்துக்கு மாநிலம் முழுவதும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான விதிமுறை அல்லது அரசு ஆணை வெளியிட முடியுமா என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

நீதிபதி பி. புகழேந்தி, ஊழலை ஒழிப்பது அரசின் முக்கிய நோக்கமாக இருப்பதால், இதற்கான தெளிவான வழிகாட்டுதல் அந்த நோக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : Free House : இலவச வீடு வழங்கும் தமிழக அரசு! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

25
ரூ.45,000 வைத்திருந்த பெண் அதிகாரி!

இந்தக் கேள்வி திடீரென எழவில்லை. ஒரு குறிப்பிட்ட வழக்கை விசாரித்தபோதுதான் இந்த விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியில் துணைப் பதிவாளராகப் பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவர், 2021 ஜனவரி 8-ம் தேதி பணியில் இருந்தபோது ரூ.45,000 ரொக்கத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது நடைபெற்ற திடீர் சோதனையைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை விசாரணை தொடங்கப்பட்டது. இதை எதிர்த்து அந்த அதிகாரி உயர் நீதிமன்றத்தை நாடினார்.

அவரது தரப்பில், அந்தப் பணம் திருமணச் செலவுக்காக வைத்திருந்த தனிப்பட்ட பணம் என்றும், அதற்காக தன்னைத் தேவையின்றி துன்புறுத்துவதாகவும் வாதிடப்பட்டது.

இதையும் படிங்க : Amala Rajayoga : கன்னி ராசி அமாவாசையால் அமல ராஜயோகம்! சம்பவம் செய்யப் போகும் 4 ராசிகள்!

35
ரூ.1,500 இருந்தாலும் நடவடிக்கையா?

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச ரொக்கத் தொகையை நிர்ணயிக்கும் பொதுவான விதிமுறை தற்போது இல்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில், இதுபோன்ற வழக்குகளில் ரூ.1,500 போன்ற குறைந்த தொகை ரொக்கம் வைத்திருந்ததற்காகக்கூட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் அல்லாமல், பிற பகுதிகளிலும் அரசு ஊழியர்களிடம் கணக்கில் காட்டப்படாத பணம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்கள் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு வழிவகுத்துள்ளன. உதாரணமாக, 2010-ம் ஆண்டு ஒரு துணைப் பதிவாளர் மீது நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,500 கணக்கில் காட்டப்படாத பணம் கைப்பற்றப்பட்டதாகவும், அதனுடன் தொடர்புடைய ஒழுங்கு நடவடிக்கை நடைபெற்றதாகவும் நீதிமன்றப் பதிவுகள் காட்டுகின்றன.

இதையும் படிங்க : Family Series : குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டிய 5 அழகான வெப் சீரிஸ்கள்!

45
அப்படின்னா அரசு ஊழியர்கள் பணமே வைத்திருக்கக்கூடாதா?

அப்படி அர்த்தம் கிடையாது.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றம், “அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் வைத்திருக்கக் கூடாது” என்று தற்போதைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மாறாக, மாநிலம் முழுவதும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் ஒரே மாதிரியான ரொக்கப் பண வரம்பை அரசு நிர்ணயிக்க முடியுமா? என்பதைத்தான் தமிழக அரசிடம் நீதிமன்றம் கேட்டுள்ளது.

இதற்கு அரசு தரப்பில், பதிவுத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் தொடர்பாக ஏற்கெனவே ஒரு வழிகாட்டுதல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. பதிவுத்துறை தலைமைப் பதிவாளர் அலுவலகம் 2009 பிப்ரவரி 23-ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கை இதற்கான வழிகாட்டுதல்களை கொண்டிருப்பதாக கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், அந்த வழிகாட்டுதல் அனைத்து துறை அரசு ஊழியர்களுக்கும் பொதுவாக பொருந்துமா என்பது தெளிவாக இல்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : Lost Luggage : ரயிலில் பை தொலைந்துபோனால் உடனே இதைச் செய்யுங்கள்!

55
அடுத்து என்ன நடக்கும்?

இப்போது முக்கியமாக கவனிக்க வேண்டியது, தமிழக அரசு என்ன பதில் அளிக்கிறது என்பதுதான்.

பணியின்போது அரசு ஊழியர்கள் வைத்திருக்கக்கூடிய ரொக்கத் தொகைக்கு ஒரு பொதுவான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டுமா? அப்படி ஒரு விதிமுறை கொண்டுவர முடியுமா? என்பதற்கு அரசு தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

இன்றைய சூழலில் பெரும்பாலான பணப் பரிவர்த்தனைகளை மின்னணு முறையில் செய்ய முடிவதால், அலுவலகத்துக்கு வரும் அரசு ஊழியர்கள் வைத்திருக்க வேண்டிய ரொக்கத் தொகைக்கு ஒரு பொருத்தமான வரம்பு நிர்ணயிப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த வழக்கு செப்டம்பர் 3, 2026 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதுவரை, “அரசு ஊழியர்கள் ரூ.10,000 மட்டுமே வைத்திருக்க வேண்டும்” அல்லது “ரூ.50,000 வரை வைத்திருக்கலாம்” என்று எந்தத் தொகையையும் அதிகாரப்பூர்வ வரம்பாகக் கூற முடியாது. தற்போது அத்தகைய மாநிலம் தழுவிய பொதுவான வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என்பதுதான் முக்கியமான உண்மை.

இதையும் படிங்க : Train Ticket : தட்கல் டிக்கெட் கிடைக்கலையா? கடைசி நேரத்துல கன்ஃபார்ம் டிக்கெட் வாங்க இந்த ட்ரிக் ஃபாலோ பண்ணுங்க!

Read more Photos on
click me!

Recommended Stories