இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்டு வருவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு உட்பட அயலக்கத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்!
இந்த கூட்டத்தில், தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி, நேபாள நாட்டிற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அங்கு சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கையாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு மற்றும் வினோத் ஆகிய 4 பேர் டெல்லி செல்ல உள்ளனர்.