அடி தூள்.! 2025-26 கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா.?

Published : May 27, 2025, 12:00 PM ISTUpdated : May 27, 2025, 12:32 PM IST

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். வரும் கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது என்பதை பார்ப்போம்.

PREV
14
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு

தமிழகம் முழுவதும் தொடக்க பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆண்டுத் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கோடை வெயில் தமிழகம் முழுவதும் வாட்டி வதைத்து வந்ததால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகலாம் என கூறப்பட்டு வந்தது. ஆனால் கத்திரி வெயில் தொடங்கியது முதலே சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் திட்டமிட்டப்படி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

24
விடுமுறை நாட்கள்

இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில் பொது விடுமுறைகள் குறித்து மாணவர்கள் இடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. அதன்படி ஜூன் 7ம் தேதி சனிக்கிழமை பக்ரித் பண்டிகை, ஜூலை 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மொஹரம் பண்டிகை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

34
ஆகஸ்ட் மாதம் விடுமுறை

ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 3 நாட்கள் விடுமுறை வருகிறது. அதாவது ஆகஸ்ட் 15ம் தேதி வெள்ளிக்கிழமை சுதந்திர தினம், 16ம் தேதி சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, 27ம் தேதி புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி பண்டிகைகளுக்கு விடுமுறை வருகிறது.

44
கிறிஸ்துமஸ் பண்டிகை

செப்டம்பர் 5ம் தேதி வெள்ளிக்கிழமை மிலாடி நபி, அக்டோபர் 1ம் தேதி புதன்கிழமை ஆயுத பூஜை, அக்டோபர் 2ம் தேதி வியாழக்கிழமை விஜயதசமி, காந்தி ஜெயந்தி, 20ம் தேதி திங்கள் கிழமை தீபாவளி என 3 நாட்கள் விடுமுறை வருகிறது. டிசம்பர் 25ம் தேதி வியாழக்கிழமை அன்று கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது. மேலும் ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கல்வித்துறை அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories