இன்று தான் கடைசி நாள்.! மாணவர்களுக்கு வெளியான முக்கிய அலர்ட்

Published : May 27, 2025, 11:20 AM ISTUpdated : May 27, 2025, 11:24 AM IST

தமிழகத்தில் 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மே 27, 2025 வரை www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

PREV
14
உயர்கல்வியில் சேர தயாராகும் மாணவர்கள்

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பொறியியல் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் தமிழகத்தில் மொத்தம் 176 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. இதுவரை இளங்கலை படிப்புகளுக்கு 2 லட்சத்து 15 ஆயிரத்து 809 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

24
அரசு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு. அரசு உதவிபெறும் கல்லூரி மாணவ/ மாணவியர்களுக்குப் 'புதுமைப்பெண்' மற்றும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டங்கள் மூலமாக ரூ.1000/- வழங்கப்பட்டு வருகிறது. 'நான் முதல்வன் திட்டம்' மூலம். வேலைவாய்ப்பிற்கான பயிற்சிகள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், அரசால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைகள் மற்றும் இலவசப் பேருந்து வசதிகளும் உள்ளன.

34
அரசு கல்லூரி விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

தமிழக அரசு கலைக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவுசெய்யலாம். 07.05.2025 முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க (27.05.2025 ) இன்று கடைசி நாள் ஆகும். 

தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre-AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

44
விண்ணப்பிக்க கட்டம் எவ்வளவு.?

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க ஒரு மாணவருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.48/-ம். பதிவுக் கட்டணம் ரூ.2/-மட்டுமே ஆகும். இதில் SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் ரூ.2/- மட்டும் செலுத்தினால் போதும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை Debit Card/ Credit Card/ Net Banking/ UPI மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories