ஜூன் மாதத்தில் இத்தனை நாட்கள் விடுமுறையா.! பள்ளி மாணவர்களுக்கு குஷியா.?

Published : May 27, 2025, 09:49 AM ISTUpdated : May 27, 2025, 09:59 AM IST

தமிழகத்தில் ஜூன் 2 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் பக்ரீத் பண்டிகை விடுமுறை உள்ளிட்ட எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்

PREV
14
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இந்த தேர்வு நடைபெற்று கொண்டிருக்கும் போதே வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டியதால் முன்கூட்டியை துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த உத்தரவிடப்பட்டது. 

இதனையடுத்து ஏப்ரல் 19 ஆம் தேதி பள்ளி தேர்வு முடிவடைந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. சுமார் 45 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. மீண்டும் பள்ளியானது ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

24
ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

இருந்த போதும் வெயிலின் தாக்கம் ஜூன் மாதம் உச்சத்தை தொடும் அப்போதும மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி போகும் என எதிர்பார்த்து காத்திருந்த மாணவர்களுக்கு ஷாக் தகவலாக தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறைய தொடங்கியது. 

மேலும் மழையும் பெய்து வருகிறது. இதனால் திட்டமிட்டபடி ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான பணிகளையும் தொடங்குமாறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

34
ஜூன் மாதம் விடுமுறை நாட்கள்

இந்த நிலையில் ஜூன் மாதம் பள்ளி மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது என்பதை தற்போது பார்க்கலாம். அந்த வகையில்,

ஜூன் 7ஆம் தேதி பக்ரீத் பண்டிகை விடுமுறை, ஜூன் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, இதனை தொடர்ந்து 14ஆம் தேதி சனிக்கிழமை, 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 21ஆம் தேதி சனிக்கிழமை, 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அடுத்தாக 28ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாகும்.

44
மாணவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் ஜூன் மாதம்

ஜூன் மாதம் மாணவர்களுக்கு கூடுதலாக எந்த விடுமுறை நாட்களும் இல்லை, பக்ரீத் பண்டிகையும் சனிக்கிழமையில் வருவதால் மாணவர்களுக்கு ஜூன் மாதம் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. அதே நேரம் ஜூலை மாதம் 6ம் தேதி மொஹரம் பண்டிகையும் ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது.

எனவே ஜூலை மாதமும் மாணவர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுக்கவுள்ளது. ஆகஸ்ட் மாதம் 15, 16, 27ம் தேதிகள் முறையே சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்படுவதால் 3 நாட்கள் மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும்  கூடுதல் விடுமுறை கிடைக்கவுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories