முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா வருகிற 13-ம் தேதி தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 18-ம் தேதி நடைபெறுகிறது. சூரசம்ஹாரத்தை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வர்.