காஞ்சி சங்கர மடத்திற்கு ஓராண்டாக வராத சங்கராச்சாரியார்.. என்ன காரணம் .? எங்கே சென்றார்.? வெளியான தகவல்

First Published | Nov 8, 2023, 10:07 AM IST

சங்கராச்சாரியார் என பொதுவாக அழைக்கப்படும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். கடந்த ஓராண்டிற்கும் மேலாக, காஞ்சிபுரத்தில் இல்லை என்றும் காஞ்சி சங்கரமடத்திற்கு வருவதில்லையென்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

காஞ்சி சங்கரமடம் தென்னிந்தியாவின் மிகப்பெரிய அடையாளம். வேற்று மாநிலத்தவர் மட்டுமல்ல வேற்று நாட்டவரும் விரும்பி வருகின்ற இடம். அத்தனை சிறப்பு வாய்ந்த சங்கரமடம். இந்த சங்கரமடத்தை ஆதிசங்கரால் நிறுவப்பட்டது. சங்கரமடத்தின் சேவைகளில் 64 ஆண்டுகள் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர் ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள்,

பல்வேறு மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வந்து ஜெயேந்திரரை சந்தித்து பேசுவது வாடிக்கையான ஒன்று. அந்த அளவிற்கு செல்வாக்கு மிக்கவரை சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்து ஜெயலலிதா சிறையில் அடைத்தது பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.  இவர் மீது பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கு பல ஆண்டுகள் நீதிமன்ற விசாரணையில் இருந்து கடைசியாக அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார். 

Tap to resize

இவருக்கு அடுத்ததாக இந்த மடத்தின் 70-வது பீடாதிபதியாக இருப்பவர் சங்கராச்சாரியார் என பொதுவாக அழைக்கப்படும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். இவர் கடந்த ஓராண்டுக்கு மேலாக காஞ்சி சங்கர மடத்திற்கு வருவதில்லையென்ற தகவல் பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. எங்கே சென்றார் விஜயேந்திர சுவாமிகள் என்ற கேள்வி பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏதேனும் அரசியல் கராணங்களால் சங்கரமடத்திற்கு வருவதில்லையா என்ற வினாவும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக காஞ்சி சங்கரமட நிர்வாகிகள் கூறுகையில், சங்கரமடத்தில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், கடந்த ஓராண்டாக இல்லையென்பது உண்மைதான்.  
கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ம் தேதி விஜய யாத்திரையை துவங்கிய ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், இந்தியா முழுவதும் உள்ள சங்கர மடங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் முக்கிய கோவில்களுக்கு யாத்திரை சென்றுள்ளதாக தெரிவித்தார். காசி, அயோத்தி போன்ற இடங்களுக்கு சென்ற அவர் தற்போது சீதாபூர் என்ற இடத்தில் உள்ள நரசிம்மர் கோவிலில் பூஜைகளை முடித்துக் கொண்டு, லக்னோவுக்கு சென்றுள்ளதாக தெரிவித்தார்

Kanchi Peetadhipathi Jagadguru Sri Vijayendra Saraswsthi

இந்த விஜய யாத்திரை பயணம் முடித்துக்கொண்டு எப்போது வருவார் என தெரியாது என கூறியவர், 3 வருடங்கள் கூட இந்த பயணம் நடைபெறும் என தெரிவித்தார். இந்த விஜய பயணத்தால் சங்கரமடத்தில் நடைபெறும் பணிகளில் எந்த வித பாதிப்பும் இல்லையென்றும், காஞ்சி சங்கர மடத்தில் வழக்கம்போல் பணிகள் அனைத்தும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

இந்த கோவிலுக்கு சென்றால் மதுரை மீனாட்சி அம்மனையும், காசி விஸ்வநாதரையும் தரிசித்த பலன் கிடைக்கும்..

Latest Videos

click me!