110 கிமீ வேகத்தில் தரைக்காற்று.. தீவிரம் காட்டும் மோன்தா.. சென்னை உட்பட 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

Published : Oct 28, 2025, 07:01 AM IST

வங்கக்கடலில் உருவான மோன்தா இன்று மாலை அல்லது இரவில் கரையைக் கடக்கும் என்ற நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உட்பட 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
13
110 கிமீ வேகத்தில் தரைக்காற்று

வங்கக்கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் ஆந்திரா மாநிலம், காக்கிநாடா அருகே இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 90 முதல் 110 கிமீ வரை தரைக்காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

23
ஆரஞ்சு நிற எச்சரிக்கை

மேலும் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய் கிழமை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள ஆய்வு மையம், ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வழங்கி உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தேனி, தென்காசி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

33
பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories