கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து நடிகர் விஜய் சந்தித்து மன்னிப்பு கேட்டார். ஆனால், பாதிக்கப்பட்டவர்களைத் தேடிச் செல்லாமல், அவர்களை வரவழைத்தது பண்ணைத்தனம் கவர்ச்சித்திமிர் என விசிக வன்னி அரசு கடுமையாக விமர்சனம்.
தவெக தலைவர் விஜய் கரூர் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து தவெக தலைவர் விஜய் சென்னை திரும்பினார். மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் அதாவது முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் 41 குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். ஆனால் விஜய் மட்டும் ஆறுதல் தெரிவிக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட 41 குடும்பத்தினரிடமும் வீடியோ காலில் பேசிய விஜய் விரைவில் உங்களை சந்திக்கிறேன் என்று கூறியிருந்தார்.
25
காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட விஜய்
இந்நிலையில் கரூரில் வந்து பார்க்க முடியாததால், 41 குடும்பத்தில் 37 குடும்பத்தினரை சொகுசு பேருந்தில் சென்னை மாமல்லபுத்திற்கு அழைத்து வரப்பட்டு பார் பாயிண்ட்ஸ் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சினிமா ஹீரோவாக இருப்பதால் கதை சொல்லும் இயக்குனரிலிருந்து தயாரிப்பாளர் வரை வீடு தேடி வருவதைப்போல, மக்களையும் அப்படி மாற்றுவது கவர்ச்சித்திமிர் இல்லையா? என வன்னி அரசு விமர்சித்துள்ளார்.
35
வன்னி அரசு
இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச் செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் நடிகர் விஜய் அவர்களை காண வந்த ரசிகர்கள் 41 பேர் மரணித்த கொடுந்துயரத்தை கண்டும் காணாமல் ஓடி பதுங்கிய ‘ஹீரோ’,சரியாக ஒரு மாதம் கழித்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்திக்கிறார். Sorry பாதிக்கப்பட்ட மக்கள் ஹீரோவை சந்திக்கின்றனர். இது அரசியலில் புதுசு.
இதுவரை, இச்சமூக கட்டமைப்பில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இறந்து போனவர்களின் வீடுகளுக்கு தான் உறவினர்களோ, தலைவர்களோ தேடிப்போய் ஆறுதல் கூறியது மரபாக இருந்து வந்தது. அதுவே வெகு மக்களின் ‘ஏற்பிசை’வாகவும் இருந்தது. ஆனால்,’சினிமா ஹீரோ’கட்சி ஆரம்பித்ததும் எல்லா காட்சிகளுமேசினிமா காட்சிகளாக மாற்றுகிறார்கள். இப்போது கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பனையூருக்கு பக்கத்தில் மாமல்லபுரத்துக்கு அழைத்து நிதி கொடுத்து அரசியல் செய்வது அருவருப்பின் உச்சம். இனி விஜய் ரசிகர்களோ அல்லது விஜயின் உறவினர்களோ உடல் நலமில்லாமல் மரணித்தால், உடலை பனையூருக்கு தூக்கி வரச்சொல்லி அஞ்சலி செலுத்துவாரா? என்னவிதமான மனநிலை இது? நிலவுடமையாளர்களோ பண்ணையார்களோ கூட இந்த அருவருப்பை செய்ததில்லை.
55
இது ஹீரோத்தனம் இல்லை வில்லத்தனம்
ஆனால் நடிகர் விஜய் செய்வதற்கான ஆணவம் எங்கிருந்து வந்தது? 20 லட்சத்தை தூக்கிப்போட்டால் மண்டியிட்டு வாங்கிக்கொள்வார்கள் என்னும் பண்ணைத்தனமா? இதைவிட யாராவது மக்களை அவமதிக்க முடியுமா? சினிமா ஹீரோவாக இருப்பதால் கதை சொல்லும் இயக்குனரிலிருந்து தயாரிப்பாளர் வரை வீடு தேடி வருவதைப்போல, மக்களையும் அப்படி மாற்றுவது கவர்ச்சித்திமிர் இல்லையா? இது ஜனநாயகத்துக்கு எதிரான அயோக்கியத்தனம் இல்லையா? #ஜனநாயகன் என படம் மட்டும் எடுத்தால் போதுமா? உண்மையான ஜனநாயகனாக செயல்பட வேண்டாமா? நுகர்வு கலாச்சாரத்தில் டிபார்ட்மென்ட் ஸ்டோரை நோக்கி மக்களை நகர்த்தியது போல, ஜனநாயகத்திலிருந்து சர்வதிகாரத்துக்கு நகர்த்தும் மக்கள் விரோத அரசியலையே செய்து வருகிறார் சினிமா ஹீரோ விஜய். இது ஹீரோத்தனம் இல்லை; வில்லத்தனம் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.