விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மிலாது நபி விடுமுறை இருந்ததால் தொடர்ந்து 3 நாள் விடுமுறை கிடைத்தது. இனி காலாண்டு தேர்வுக்கு பிறகு கிட்டத்தட்ட 11 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். ஆனால் அதற்கு முன்பு ஏதாவது விடுமுறை கிடைக்குமா? என மாணவர்கள் காலாண்டரை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், செப்டம்பர் 11ம் தேதி சிவகங்கை, ராமநாதபுரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
24
பள்ளிகளுக்கு விடுமுறை
அதாவது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வரும் 11ம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் 68வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தான் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி வெளியிட்ட அறிவிப்பில், 'வருகின்ற 11.9.2025ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெற இருக்கின்ற தியாகி இமானுவேல் சேகரன் 68-வது நினைவு தினம் அமைதியாக நடைபெறவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், மாணவ/மாணவியரின் நலன் கருதி, வருகின்ற 11.9.2025 ம் தேதி அன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள் / ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு / கல்லூரிகளுக்கு / இதர கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது.
34
மாணவர்கள், ஆசிரியர்கள் குஷி
அதற்கு பதிலாக வருகின்ற 20.9.2025 அன்று பள்ளிகள்/ கல்லூரிகள்/ இதர கல்வி நிறுவனங்கள் இயங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. இதனால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள பகுதியை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்டாட்டத்தில் துள்ளிக் குதித்து வருகின்றனர்.
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9ம் தேதி (நாளை) முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.