TASMAC Holiday: மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்! 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

Published : Sep 08, 2025, 08:50 PM IST

டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

PREV
14
TASMAC Shops Holiday

தமிழ்நாடு முழுவதும் முக்கிய வீதிகள்தோறும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் அதிகரித்து வரும் நிலையில், மது குடிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசுக்கு வருவாய் ஈட்டித் தருவதில் டாஸ்மாக் கடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் டாஸ்மாக் விற்பனை பல நூறு கோடிகளை அள்ளும்.

24
டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை

தமிழகத்தில் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, வள்ளலார் நினைவு தினங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் முக்கியமான தலைவர்களின் நினைவு தினங்களிலும் அந்தந்த மாவட்டங்களின் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

34
மதுபானம் விற்பனை செய்ய தடை

இந்த நாட்களில் மதுபானம் விற்பனை செய்வது முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9ம் தேதி (நாளை) முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.

44
144 தடை உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதற்கும், ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாடகை வாகனங்கள் மாவட்ட நிர்வாகத்தின் உரிய அனுமதி இன்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சொந்த காரில் வருபவர்கள் வாகன எண், வாகன பதிவு சான்று, வாகன ஓட்டுநர் உரிமம், வாகனத்தில் பயணம் செய்வோர் விவரங்களை சம்பந்தப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் அளித்து, அனுமதி சீட்டு பெற்று வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories