Published : Nov 18, 2023, 06:26 PM ISTUpdated : Nov 18, 2023, 06:30 PM IST
பாம்பன் தீவில் உள்ள ராமேஸ்வரத்தையும், மண்டபத்தையும் இணைக்கும் புதிய பாம்பன் பாலம் புதுப்பொலி பெற்றுள்ளது. இன்னும் சில மாதங்களில் அந்தப் பாலம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படும்.
பழைய பாம்பன் பாலத்திற்கு இணையாக ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தால் ரூ.535 கோடி செலவில் இந்தப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. புதிய பாம்பன் பாலத்தின் சிறப்புக்குரிய சில முக்கிய உண்மைகளைப் பார்ப்போம்:
210
Pamban bridge
புதிய பாம்பன் பாலம் தற்போது 90% நிறைவடைந்துள்ளது. 2019 இல் பிரதமர் மோடியால் இந்தப் பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தப் பாலம் எதிர்கால மின்மயமாக்கலுக்கு ஏற்ப இரட்டை ரயில் பாதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
310
Pamban Railway bridge
புதிய பாம்பன் பாலம் 2 கிலோமீட்டர் நீளத்திற்கு இருக்கும். இது 18.3 மீட்டர் நீளமுள்ள கர்டர்களுடன் 99 இடைவெளிகளைக் கொண்டிருக்கும். நேவிகேஷன் பகுதி 63 மீட்டர் இருக்கும்.
410
Pamban Train bridge
புதிய பாம்பன் பாலத்தின் மிகவும் தனித்துவமான அம்சம் அதன் செங்குத்து லிப்ட் வசதி ஆகும். இது பாலத்தின் கீழ் கப்பல்கள் சீராக செல்ல உதவும். செங்குத்து லிப்ட் இடைவெளியில் ரயில் கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய எலக்ட்ரோ மெக்கானிக்கல் கன்ட்ரோல் இருக்கும்.
510
Rameshwaram Pamban bridge
பாலத்தின் செங்குத்து லிப்ட் பகுதியில் கப்பல் போக்குவரத்தை அனுமதிக்கும்போது, ரயில் போக்குவரத்து நிறுத்தப்படும். கப்பல்கள் கடந்து செல்லப் போதுமான இடத்தை உருவாக்க பாலத்தின் லிப்ட் பகுதி உயரும்.
610
Pamban Railway bridge
இந்தப் பாலத்தில் உள்ள செங்குத்து லிப்ட், நாட்டிலேயே முதல் முறையாக, 72.5 மீட்டர் நீளத்திற்கு கப்பல் போக்குவரத்தை அனுமதிக்கும். புதிய பாம்பன் பாலம் பழைய பாலத்தை விட 3 மீட்டர் உயரத்தில், அதாவது கடல் மட்டத்திலிருந்து 22 மீட்டர் உயரத்திற்கு கப்பல்கள் செல்ல முடியும்.
710
Pamban bridge pics
முந்தைய பாம்பன் பாலம் ஷெர்சர்ஸ் ஸ்பான் (Scherzer's Span) முறையில் கையாளப்பட்டது. பாலத்தின் 61 மீட்டர் ஸ்டீல் டிரஸ் கப்பல்களை அனுமதிக்க அதிகபட்சம் 81 டிகிரி வரை செங்குத்துத்தாகத் திறக்கும்.
810
Indian Railway Sea Bridge
பழைய பாம்பன் பாலம் குறுகிய பாதையாக வடிவமைக்கப்பட்டு 2007இல் அகலப்பாதையாக மேம்படுத்தப்பட்டது. அந்தப் பழைய பாம்பன் பாலம் தற்போது இயக்கப்படாமல் உள்ளது.
910
Pamban Sea bridge
2022ஆம் ஆண்டு டிசம்பரில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஐஐடி மெட்ராஸ், ரயில்வே ஆராய்ச்சி அமைப்பு ஆகியவை இந்தப் பாலத்தின் ஸ்திரத்தன்மை குறித்து அச்சம் தெரிவித்தை அடுத்து, இந்தப் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.
1010
Pamban Vertical lift bridge
1914இல் திறக்கப்பட்ட பழைய பாம்பன் பாலம் இந்தியாவின் முதல் கடல் பாலமாகும். ஒரு சில மாதங்களில் புதிய பாம்பன் பாலம் திறக்கப்படுவதால், பாதுகாப்பு கருதி பழைய பாலம் எண் அகற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.