தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் கீழக்கரை, உச்சிப்புளி ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அனைத்து நகரங்களில் இணைக்கும் வகையில் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நீண்ட நேரங்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்வதை தவிர்க்கும் வகையில் சிறிய நகரங்களில் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு சுற்றுலா, தொழில் மற்றும் வணிகத்திற்கு பிரபலமான இடமாகும். அதிலும் ராமேஸ்வரம், தமிழ்நாட்டில் உள்ள ஒரு புனிதமான தீர்த்தயாத்திரை மற்றும் சுற்றுலா மையமாகும்.
24
ராமநாதபுரத்தில் விமான நிலையம்
ராமநாதசுவாமி கோயில், தனுஷ்கோடி,ராமர் பாலம் (ஆதாம் பாலம்), பாம்பன் பாலம், அப்துல் கலாம் நினைவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளது. இந்த இடங்களை பார்க்கவே பல லட்சம் பேர் ராமேஸ்வரத்திற்கு வருகை புரிகிறார்கள். எனவே ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி சர்வதேச விமான நிலையமும், தூத்துக்குடி, சேலம், புதுச்சேரி என 3 உள்நாட்டு விமானநிலையமும் உள்ளது.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் தமிழ்நாடு பட்ஜெட்டில் ராமேஸ்வரம் பகுதியில் (ராமநாதபுரம் மாவட்டத்தில்) புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ராமநாதபுரத்தில் விமான நிலைய அமைக்க கீழக்கரை, உச்சிப்புளி ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிட்கோ தகவல் தெரிவித்துள்ளது
34
விமான நிலையம் அமைக்க நிலம் தேர்வு
ராமநாதபுரம் விமான நிலையத்திற்கு இடம் தேர்வு செய்ய கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) முதலில் 5 இடங்களை அடையாளம் கண்டது. தற்போது உச்சிப்புளி மற்றும் கீழக்கரை ஆகிய 2 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.
மேலும் ராமேஸ்வரம் அருகில் விமான நிலையம் அமைக்கும் வகையில் 700 ஏக்கர் நிலம் உள்ளதா.? எனவும் ஆராயப்பட்டு வருகிறது.ஆனால், தற்போது தேர்வு செய்யப்பட்ட இடங்கள் அடிப்படையில் 500 முதல் 600 ஏக்கர் நிலம் மட்டும் போதுமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது,
ராமநாதபுரத்திற்கு அருகே வேறு பொருத்தமான இடத்தை தேட வேண்டும் என மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஏனெனில் உச்சிப்புளி இடத்தை விமான நிலையத்திற்கு பயன்படுத்த கடற்படையிடம் இருந்து அனுமதி பெற வேண்டிய தேவை உள்ளது. மேலும் விமான நிலையம் அமைக்க 3500 மீட்டர் நீளமும், 500 மீட்டர் அகலமும் கொண்ட செவ்வக வடிவ நிலத்தின் இருப்பு,
நிலப்பரப்பு, சாலை வசதிகள், காற்றின் போக்கு, மண்ணின் தன்மை போன்றவை முக்கிய தேவையாக உள்ளது. எனவே இதன் அடிப்படையில் தான் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்திய கூறுகளை இந்திய விமான நிலைய ஆணையம் ஆய்வு செய்யும். அதன் பிறகு அடுத்த ஆண்டுக்குள் விமான நிலையத்திற்கான இடத்தை தமிழக அரசு இறுதி செய்ய உள்ளது.