Heavy Rain
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக போக்கு காட்டி வந்த ஃபெஞ்சல் புயலானது நேற்று மாலை சுமார் 5.30 மணி முதல் இரவு 11 மணிக்குள் புதுவை அருகே மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடந்து. புயல் கரையை கடந்த நேரத்தில் பல்வேறு பகுதிகளில் 90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.
Heavy Rain
மிதக்கும் விழுப்புரம்
தமிழகத்தில் அதிகபட்சமாக விழுப்புரம், திண்டிவனம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விழுப்புரத்தில் ஆட்சியர் அலுவலகம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் வெள்ள நீரில் மிதக்கின்றன.
Heavy Rain
முதல்வர் நேரில் ஆய்வு
கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். ஆய்வின் போது மரக்காணம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க உள்ளார். மாவட்டத்தின் பல பகுதிகளில் வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Heavy Rain
இன்றும் மழை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதனமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Heavy Rain
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எதிரொலியாக திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேலூர், சேலம், திருப்பத்தூர், தருமபுரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.