திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு.! தமிழகத்தில் இந்து அமைப்புகள் எடுத்த அதிரடி முடிவு

First Published | Sep 26, 2024, 9:17 AM IST

திருப்பதி தேவஸ்தானத்தில் நைவேத்யத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இச்செயலுக்கு பிராயச்சித்தமாக பல்வேறு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி லட்டு சர்ச்சை

திருப்பதி கோயிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்த கோயிலில் வழங்கப்படும் லட்டு உலக பிரசித்து பெற்றது. லட்டின் சுவைக்காகவே ஏராளமானோர் போட்டி போட்டு லட்டு வாங்கி செல்வார்கள். இந்தநிலையில் பக்தர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் பன்றிக் மற்றும் மாட்டுக் கொழுப்பும், மீன் எண்ணெய், சோயா பீன், சூரிய காந்தி, பாமாயில் கலந்து இருப்பதாக அம்மாநில அரசே அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.

கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் இந்த கலப்படம் நடத்தப்பட்டதாக புகார் செய்யப்பட்டது. இதற்கு ஜெகன்மோகன் அரசும் பதிலடி கொடுக்கு வருகிறது. மேலும் திருப்பதி லட்டில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதையடுத்து கோயிலில் பல்வேறு சடங்குகள் மேள்கொள்ளப்பட்டு புனிதமாக்கப்பட்டது. மேலும் ஒவ்வொருவரும் வீட்டில் விளக்கு ஏற்றி பூஜை செய்ய வேண்டும் எனவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது. 

இந்து அமைப்பு ஆலோசனை கூட்டம்

இந்தநிலையில்திருப்பதி தேவஸ்தானத்தில் நைவேத்யத்தில் விலங்கு கொழுப்புப் கலக்கப்பட்டதை தமிழகத்தில் உள்ள ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பதி பக்தர்கள் பேரவை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சின்மயா மிஷன், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம், விஷ்வ ஹிந்து பரிஷத், பாரதீய சிக்ஷா மண்டல், அனைத்திந்திய நாடார் கூட்டமைப்பு. அனைத்து செட்டியார்கள் முன்னேற்ற பேரவை, தமிழ்நாடு குரும்பர் மக்கள் முன்னேற்ற சங்கம், ஆர்ட் ஆஃப் லிவிங், மாதா அமிர்தானந்தமயி மட், ஹிந்து முன்னணி, சபரி மலை ஐயப்ப சேவா சமாஜம், வித்ய பாரதி, ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை, சிவ சாம்பவ சேவா சங்கம், அனைத்து மறவர் பொது நல சங்கம்

Latest Videos


Tirupati Laddu

லட்டில் விலங்கு கொழுப்பு- பக்தர்கள் மன வேதனை

உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் சென்னையில் நேற்றைய தினம் (செப்டம்பர் 25) 2024 ஒன்று கூடி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வெங்கடாசலபதிக்கு சமர்ப்பிக்கப்படும் நைவேத்தியத்தில் விலங்கு கொழுப்பினை கலப்படம் செய்ததற்கு தமது கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் நைவேத்தியம், பிரசாதம் போன்றவற்றை மிகவும் புனிதமாக போற்றி வரும் பக்தர்களின் மனதை இந்த செயல் மிகவும் காயப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே புனிதமான சடங்குகளில் விலங்கு கொழுப்பை கலப்படம் செய்தது என்பது முழுமையாக புனிதத்தை களங்கப்படுத்திய செயல் எனவும், இது முற்றிலும் தவறானது மட்டுமல்லாமல், பக்தர்களின் மனநிலையைப் பாதிக்கும் வகையிலும் இருக்கிறது என இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Tirupati

கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்

மேலும் பாரம்பரிய நடைமுறைகள் பாதுகாக்கப்படும் பொருட்டும். இறைவனுக்கு சமர்ப்பிக்கப்படும் பொருட்களின் புனிதத்தை போற்றி பாதுகாக்கும் பொருட்டும் உறுதியேற்கும் வகையில் பிராயச்சித்தம் செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, நெய்யில் விலங்கு கொழுப்பை கலந்த செயலுக்கு பொறுப்பானவர்கள் மீது முறையான சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், 

வெளிப்படை தன்மையுடன் உணவுப் பொருட்களின் மாதிரிகளின் பகுப்பாய்வு உட்பட வழக்கின் விவரங்களை அவ்வப்போது வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது போன்ற செயல்களை தடுக்க  கோவில் பிரசாதங்களுக்கு சாத்விக் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை டூ திருப்பதி பாதயாத்திரை

இது போன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நடக்காமல் இருக்கவும், மத உரிமையை பாதுகாக்கவும், கோவில்கள் அரசாங்கத்தின் பிடியிலிருந்து முற்றிலுமாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஹிந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இச்சம்பவத்திற்கு பிராயச்சித்தமாக புரட்டாசி மாதத்தின் கடைசி வாரத்தில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹிந்து சமய சடங்குகளின் உன்னதத்தை பாதுகாக்கவும், சமய சடங்குகளில் சமர்ப்பிக்கப்படும் பொருட்களின் தூய்மையை உறுதிப்படுத்தவும் இந்த முக்கியமான இயக்கத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து பக்தர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!