விஜய் மாநாட்டிற்கு போலீஸ் விதித்த 17 கிடுக்குப்பிடி கண்டிஷன்கள் என்னென்ன?

First Published | Sep 26, 2024, 8:13 AM IST

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில் காவல்துறை விதித்துள்ள 33 நிபந்தனைகளில் கண்டிப்பாக இந்த 17 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

thalapathy vijay

தமிழக அரசியலில் திரை நட்சத்திரங்கள்

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய அரசியல் கட்சிகள் மாறி, மாறி ஆட்சி அமைத்து வரும் நிலையில், இந்த கட்சிகளுக்கு எதிராக தொடங்கிய பல கட்சிகள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது. மேலும் இந்த இரண்டு கட்சிகளின் கூட்டணிக்காக புதிதாக தொடங்கிய கட்சிகள் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக விஜயகாந்தின் தேமுதிக ஆரம்பத்தில்  திமுக- அதிமுகவிற்கு டப் கொடுத்த நிலையில் நாட்கள் செல்ல, செல்ல அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தனித்துவத்தை இழந்து விட்டது. அடுத்ததாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை நடிகர் சரத்குமார் தொடங்கினார். ஒன்று அல்லது இரண்டு இடங்களுக்காக திமுக , அதிமுகவுடன் கூட்டணி பேசியவர், கடைசியில் பாஜகவோடு இணைந்து விட்டார்.

அரசியலில் கலக்க வரும் விஜய்

இதே போல மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் சுமார் 10 வருடங்கள் நாடாளும்ன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை தனித்து எதிர்கொண்டார். இறுதியாக திமுக கூட்டணிலையே சேர்ந்து விட்டார். இது போன்று அரசியல் கட்சிகள் பல வந்த இடம் தெரியாமல் போன நிலையில் தற்போது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலையே அதிக வசூலை குவிக்கும் நடிகராக விஜய் உள்ளார். ஒரு படத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் விஜய் அனைத்தையும் தூக்கி எரிந்து விட்டு அரசியல் களத்தில் களம் இறங்கியுள்ளார். இந்த ஆண்டு ஆரம்பத்தில் தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை பதிவு செய்தவர், அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார். இதனையடுத்து தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி மற்றும் பாடலையும் வெளியிட்டு அசத்தினார்.

Latest Videos


Thalapathy Vijay

விஜய் முதல் அரசியல் மாநாடு

இதோடு நிற்காமல் தனது முதல் அரசியல் மாநாடு தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டார். அதன் படி செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியது. காவல்துறையில் அனுமதியும் கேட்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறை மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்டு பல கட்ட ஆலோசனைக்கு பிறகு 22 கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த நிலையில் 33 நிபந்தனைகள் விதித்து மாநாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட தேதியில் மாநாடு நடத்த எந்தவித அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கவில்லை. இதனையடுத்து மாநாடு எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்தது. இந்தநிலையில் தொண்டர்கள் ஆவலோடு எதிர்பார்த்த படி அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடத்தப்படும் என விஜய் அறிவித்தார்.

TVK Vijay

அனுமதி கொடுத்த போலீஸ்

இதனையடுத்து மாநாட்டிற்கான பணிகள் மீண்டும் தொடங்கிய நிலையில் காவல்துறையினம் மீண்டும் அனுமதி கோரப்பட்டது. தற்போது தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டிற்கு அனுமதி வழங்கி போலீசார் உத்தரவிட்டுள்ளனர். மேலும் 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

1. மாநாடு மேடை அருகே ரயில்வே தண்டவாளம் இருப்பதால் பாதுகாப்பிற்காக அந்தப் பக்கம் பொதுமக்கள் செல்லாமல் இருக்க தடுப்பு அமைக்க வேண்டும்.

2. தவெக மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றி மூன்று விவசாய கிணறுகள் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவத்தை தவிர்க்க  கிணறுகளை மூட வேண்டும்.

3. மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும்.

4.தமிழக வெற்றிக்கழகம் மாநாடு நடைபெறும் போது வாகனங்களை சரியான இடத்தில் நிறுத்த வேண்டும். வலது பக்கம் வாகனத்தை நிறுத்திவிட்டு இடது பக்கம்  வரக்கூடாது. இடதுபுறமே வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

5. மாநாட்டிற்கு குழந்தைகளை அனுமதிக்க கூடாது. 

6. மாநாட்டில் கலந்து கொள்பவர்களின் அடிப்படை தேவைக்காக போதிய கழிப்பறைகள் அமைக்க வேண்டும்.

7. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூட்டத்தில் சிக்காமல் தவரிக்க மேடைக்கு வந்து செல்ல தனி வழி ஏற்பாடு செய்ய வேண்டும்.

8.  அலங்கார வளைவு வைக்கக்கூடாது. கூட்டத்தில் பட்டாசுகள் வெடிக்க கூடாது.

9. பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்படும் வகையில் சாலையோரத்தில் பேனர்களை வைக்கக்கூடாது.

10. மாநாட்டுக்கு வருபவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் ஏற்பாடு கண்டிப்பாக செய்ய வேண்டும்.

11.  மாநாட்டு மேடையில் அமரப் போகிறார்கள்?  பேசப் போகிறார்கள்? என்ற விவரங்களை முன் கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்.

12. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக  யார் தலைமையில் தொண்டர்கள்  மற்றும் பொதுமக்கள்  வருகிறார்கள்? என்ற விவரங்களை காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

13.  மாநாட்டிற்கு மேடை அமைப்பது குறித்த  பொதுப்பணி அதிகாரியிடம் அனுமதி வாங்க வேண்டும்.

14. மாநாட்டிற்கு மின்சாதன பொருட்கள் பயன்படுத்துவது தொடர்பாக  மின்வாரிய பொறியாளிடம் அனுமதி பெற வேண்டும். 

15. மருத்துவ சேவைக்கு மருத்துவத்துறையில் அனுமதி பெற வேண்டும்.

16. மின்சாதன பொருட்கள், மின்சார ஒயர்கள் செல்லும் பாதையில் மாநாட்டிற்கு வருபவர்களுக்கு நாற்காலிகள் போடக்கூடாது.

17. தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மாநாட்டு திடலில் நிறுத்த வேண்டும் என 17 நிபந்தணைகள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!