இனி ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில்களின் முழு லிஸ்ட் இதோ!

பாம்பன் புதிய ரயில் பாலம் திறக்கப்பட்டுள்ளதால் இனிமேல் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Full List Of Trains Departing Rameswaram: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பனில் கடல் நடுவே ரூ.550 கோடி செலவில் புதிய ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. பழைய பாம்பன் ரயில் பாலத்தில் அடிக்கடி கோளாறுகள் ஏற்பட்டதால் கடந்த 2020ம் ஆண்டு முதல் புதிய பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார். 

Rameswaram Railway Station

இலங்கையில் இருந்து நேரடியாக இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தடைந்த பிரதமர் மோடி, பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலும் தரிசனம் செய்கிறார். மேலும் ராமேஸ்வரம் தாம்பரம் இடையிலான புதிய பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பாம்பன் ரயில் பாலம் கட்டுமான பணிகள் காரணமாக ராமேஸ்வரம் செல்லும் அனைத்து ரயில்களும் மண்டப்ம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டன. சில ரயில்கள் ராமநாதரபும் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டு இருந்தன. இந்நிலையில், பாம்பன் ரயில் பாலம் திறக்கப்பட்டுள்ளதால் நாளை முதல் அனைத்து ரயில்களும் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட உள்ளன.

ராமேஸ்வரம்-தாம்பரம் புதிய ரயில் இன்று முதல் இயக்கம்! புறப்படும் நேரம்? எந்த வழியாக செல்கிறது?
 


Indian Railway

அதாவது ராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரயில், ராமேஸ்வரம்-திருச்சி பயணிகள் ரயில், ராமேஸ்வரம்-புவனேஷ்வர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்-அயோத்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் இனிமேல் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.

இதுமட்டுமின்றி ராமேஸ்வரத்தில் இருந்து தாம்பரத்துக்கும் கூடுதலாக இன்று முதல் எக்ஸ்பிர்ஸ் ரயில் விடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு இரண்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை எழும்பூரில் இருந்து தினமும் மாலை 5.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி வழியாகவும், தினமும் இரவு 7.15 மணிக்கு இயக்கப்டும் மற்றொரு ரயில் விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி வழியாகவும் ராமேஸ்வரம் செல்கின்றன.

Rameswaram-Tambaram New Express Train

இந்த நிலையில் தான், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு, விழுப்புரம், திரிப்பாதிபுலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்துக்கு புதிய ரயில் இயக்கப்படுகிறது. மீண்டும் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து.! வெளியான முக்கிய அறிவிப்பு- காரணம் என்ன.?

Latest Videos

click me!