கோவையையும் விட்டுவைக்காத மழை.! சாலையில் தேங்கிய நீர்- பொதுமக்கள் அவதி

Published : Oct 15, 2024, 03:30 PM IST

தமிழகத்தில் தொடர் மழையால் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கோவை வேளாண் பல்கலைக்கழகம், எம்ஜிஆர் காய்கறி மொத்த சந்தை உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

PREV
13
கோவையையும் விட்டுவைக்காத மழை.! சாலையில் தேங்கிய நீர்- பொதுமக்கள் அவதி
Heavy Rain

தமிழகத்தில் தொடரும் கன மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழையானது வெளுத்து வாங்கி வருகிறது.  தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேற்கு-வடமேற்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வருகிறது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சியின் காரணமாகவும் மழையானது கொட்டி வருகிறது. குறிப்பாக கோவையில் கடந்த 2 நாட்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்தது. தற்போது நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.. சாலைகளில் செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தவிர, தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

23

கோவையில் கன மழை

கோவையில் இயங்கும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் அதிகபட்சமாக 6.86 செ.மீ. மழை பெய்துள்ளது.  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் உழவர் நலத்துறை இயங்கும் வளாகம், ஆய்வகங்களில் மழை நீர் புகுந்துள்ளது.  கோவை, வடவள்ளி லாலி ரோடு பகுதியில் உள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், இங்கு ஆயிரக் கணக்கான மாணவ - மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் மருதமலை செல்லுகின்ற முக்கிய சாலையாக உள்ளது இந்த சாலை, நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் இந்த முக்கிய சாலையில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக மழை நீர் சாலையில் தேங்கி உள்ளது. 

கோவை மழையில் சிக்கித்தவிக்கும் மக்கள்!!
 

33
Northeast Mansoon

அமைச்சர் நேரில் ஆய்வு

இதே போல கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள எம்ஜிஆர் காய்கறி மொத்த சந்தை குளம் போல் தேங்கியுள்ள மழைநீருடன் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனிடையே கோவையில பெய்த கன மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க்ப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி மழை நீர் தேங்கியுள்ள பகுதியை பார்வையிட்டார். அப்போது தண்ணீர் தேங்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  

Read more Photos on
click me!

Recommended Stories