பல்டி அடித்த தக்காளி விலை.! ஒரே நாளில் கிடு கிடுவென உயர்வு- ஒரு கிலோ இவ்வளவா.?

First Published | Oct 15, 2024, 2:29 PM IST

தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கனமழையால் வரத்து குறைந்ததே காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அரசு விலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

tomato onion

உச்சத்தை தொட்ட காய்கறி விலை

சமையலுக்கு தேவையான காய்கறிகளின் விலையானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் பீன்ஸ் விலையும் ஒரு கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வீடுகளில் மட்டுமல்ல ஓட்டல்களிலும் தக்காளி சட்னி தயாரிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெங்காயம் சார்ந்த உணவு பொருட்களை தயாரிப்பது தவிர்க்கப்பட்டு வருகிறது.சென்னை கோயம்பேட்டில் இரண்டு தினங்களுக்கு முன்பாக தக்காளி விலை ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்று இரண்டு மடங்காக அதிகரித்து 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய்

இன்று  ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய் வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கனமழை காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள வியாபாரிகள்  கோயம்பேடு சந்தைக்கு தினசரி 1300 டன் தக்காளி வருவது வழக்கம்.

ஆனால்  மழை காரணமாக தற்போது 600 முதல் 800 டன் மட்டுமே வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே தக்காளி விலை அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.  வரும் நாட்களில் மழை பாதிப்பை பொறுத்து தக்காளி விலை உயர்வு இருக்கும் எனவும் கூறினர்.  இதனிடையே தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்துள்ளது.

Tap to resize

குறைந்த விலையில் தக்காளி விற்பனை

பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல வெங்காயத்தையும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் தக்காளி மற்றும் வெங்காயத்தை குறைந்த விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. 

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீட்ரூட் 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒன்று 20ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 

காய்கறி விலை என்ன.?

சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ ரூ. 60 ரூபாய்க்கும்,  காலிபிளவர் ஒன்று 30 முதல் 40 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 1 கிலோ 70 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பீன்ஸ் ஒரு கிலோ 250 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது
 

Latest Videos

click me!