chennai rain
சென்னை மக்களுக்கு அச்சம் கொடுக்கும் மழை
சென்னை மக்களுக்கு டிசம்பர் மாதம் என்றாலே பயம் தான். மழை வெள்ளத்தால் வீடுகள் முழுவதும் தண்ணீரால் மூழ்கி அனைத்து பொருட்களும் அடித்து செல்லப்படும். சொந்த வீடுகள் இருந்தும் முகாம்களில் தங்க நேரிடும், உதவி கிடைக்காதோ என மற்றவர்களை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை உருவாகும். தற்போது எப்படி இந்தாண்டு வெயில் வாட்டி வதைத்ததோ அதை விட டபுள் மடங்காக மழை கொட்டும் என வானிலை ஆய்வாளர்கள் கடந்த சில மாதங்களாக தெரிவித்து வந்தனர். அதனை மெய்பிக்கும் வகையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டித்தீர்த்துள்ளது.
chennai rain alert schools and colleges shut
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழை
தற்போது சென்னையில் மழையின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை இன்னும் ஓயவில்லை. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வாகனங்கள் மூழ்கியுள்ளது. இந்த மழையானது இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேற்கு-வடமேற்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வருவதாக தெரிவித்துள்ளது. வளிமண்டல் மேலடுக்கு சுழற்ச்சியின் காரணமாகவும் மழையானது கொட்டி வருகிறது.
Chennai Rains
தேங்கிய மழை நீர்
இந்தநிலையில் சென்னையில் வியாசர்பாடி, புளியந்தோப்பு, வேளச்சேரி,அண்ணாநகர், கோயம்பேடு, சைதாப்பேட்டை, கிண்டி, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பல இடங்களில் தேங்கியுள்ளது. நேற்று இரவு முதல் தற்போது வரை ஒரு சில இடங்களில் 20 செமீட்டர் வரை மழை பெய்துள்ளதாக தானியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
chennai rain
மழை நீடிக்கும்- சீக்கிரமாக வீட்டுக்கு வாங்க
தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் அப்டேட்டில், மழை மேகங்கள் பலவீனமடைவதாக நான் நினைக்கவில்லை. அது மேலும் மேலும் மேகங்கள் குவிந்து அசையாமல் நீடிப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த மழை தொடர்பான அறிவிப்பு யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல. சென்னையை சுற்றி பெய்து வரும் மழையில் இடைவெளி இருக்காது.
எனவே மழை மேகங்கள் மேலும் மேலும் குவியும், குறைந்தது 3 மணி நேரத்திற்கு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீடிக்கும் என தெரிவித்துளார். எனவே, அலுவலகத்திற்கு வந்தவர்கள் சீக்கிரம் கிளம்பலாம். நாளையும் மழை மேலும் வலுப்பெறும். சென்னையில் நள்ளிரவில் இருந்து தற்போது வரை ஒரு சில பகுதிகளில் 20 ச.மீட்டர் வரை மழை பெய்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.