அமெரிக்காவில் கெத்தாக ஊர் சுற்றும் தயாநிதி அழகிரி.! வெளியான சூப்பர் போட்டோ

Published : Oct 15, 2024, 12:10 PM ISTUpdated : Oct 15, 2024, 12:12 PM IST

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, உடல்நலக்குறைவால் 10 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பழைய தோற்றத்திற்கு திரும்பியுள்ளதாகவும் தெரிகிறது.

PREV
14
அமெரிக்காவில் கெத்தாக ஊர் சுற்றும் தயாநிதி அழகிரி.! வெளியான சூப்பர் போட்டோ
durai dayanidhi

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, இவர் கடந்த திமுக ஆட்சியின் போது கிளவுட் நைன் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அப்போது திரைக்கு வந்த தமிழ் திரைப்படங்களை போட்டி போட்டு வாங்கி வெளியிட்டார். பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனையடுத்த திரைத்துறையில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த தயாநிதி அழகிரி, 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அமைதியானார். எந்த வித திரைப்படங்களையும் வெளியிடாமல் இருந்து வந்தார். அப்போது தான் திமுக தலைவராக இருந்த கருணாநிதிக்கும் அவரது மகனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் திமுகவில் இருந்து மு.க. அழகிரி விலகி இருந்தார். 

24
DAYANIDHI ALAGIRI

கருணாநிதி மறைவு உள்ளிட்ட குடும்ப நிகழ்வில் மட்டும் கலந்து கொண்டு வந்தார்.இந்தநிலையில் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி  சென்னை போயஸ் கார்டனிலுள்ள  வீட்டில் வசித்து வந்தார. கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி வீட்டில் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் தயாநிதி அழகிரியை அவசர, அவசரமாக அருகில் இருந்த அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மூச்சு பேச்சு இல்லாமல் கோமா நிலைக்கு சென்ற தயாநிதி அழகிரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

34
durai dayanidhi

இருந்த போதும் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் கடந்த மார்ச் மாதம் வேலூரில் உள்ள  சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  அங்கு அவருக்கு பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது. இருந்து போதும் அவ்வப்போது தயாநிதி அழகிரி உடல் நிலை தொடர்பாக வதந்திகளும் பரவியது. இந்நிலையில், சிஎம்சி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் பயனாக தயாநிதி அழகிரி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து செப்டம்பர் 24ஆம் தேதி மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவர் மேல் சிகிச்சைக்காகவும், பிஸியோ தெரபி சிகிச்சைக்காகவும் அமெரிக்கா செல்வதாக கூறப்பட்டது.

44
DAYANANIDHI ALAGIRI

இந்தநிலையில் தான் மு.க.அழகிரியின் அக்கா செல்வியின் கணவர் முரசொலி செல்வம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு வரமுடியாத வகையில் அமெரிக்காவில் அழகிரி இருந்து வீடியோ காலில் தனது அக்காவிடம் கதறி அழுதார். இந்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், 

சுமார் 10 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தயாநிதி அழகிரி தற்போது அமெரிக்காவில் உள்ளார். தனது மனைவியோடு தயாநிதி அழகிரி எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. உடல்நிலை பாதிக்கப்படுவதற்கு முன்பு இருந்த அதே தோற்றத்தில் கெத்தாக தயாநிதி அழகிரி உள்ளார். அவரது புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் உடல்நிலை முன்னேற்றத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். 
 

click me!

Recommended Stories