மிரட்டி வரும் மழை
தமிழகத்தில் இன்னும் வட கிழக்கு பருவ மழை தொடங்காத நிலையில் இதற்கு முன்னோட்டமாக தற்போதே மழையானது சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. கோவை, மதுரை, திருச்சி என கொட்டித்தீர்த்த மழை தற்போது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு, காட்டு என காட்டி வருகிறது.
இதனால் பல இடங்களில் தண்ணீரில் மூழ்க தொடங்கியுள்ளது. தமிழக அரசு சார்பாக மீட்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேற்கு-வடமேற்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வருவதாக தெரிவித்துள்ளது.