சென்னையை நோக்கி வேகமாக வரும் கரு மேகக்கூட்டங்கள்.! இனி தான் இருக்கு வெதர்மேன் அலர்ட் ரிப்போர்ட்

First Published Oct 15, 2024, 10:49 AM IST

தமிழகத்தில் அக்டோபர் மாத தொடக்கத்தில் கனமழை பெய்துள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இன்னும் இரண்டு முதல் 3 நாட்கள் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Rain

தமிழகத்தில் நவம்பர் டிசம்பர் மாதங்களில் பெய்யத்தொடங்கும் கன மழையானது. அக்டோபர் மாதம் தொடக்கமே பயங்கரமாக தொடங்கி உள்ளது.  இது ஜஸ்ட் டிரெய்லர்தான் என்று சொல்லக்கூடிய வகையில் மழையானது நேற்று முதல் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் தற்போதே மழை நீர் தேங்க ஆரம்பித்து விட்டது. மழையானது இன்னும் இரண்டு முதல் 3 நாட்கள் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். கோயம்பேடு, அண்ணாநகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி போன்ற பகுதிகளில் மழையானது வெளுத்து வாங்குகிறது. இ்ன்று இரவு மற்றும் நாளை இன்னமும் அதி கன மழை இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Heavy Rain

இந்த மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  மேலும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

Latest Videos


இதன் காரணமாக இன்று (15.10.2024) தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கம் திருவள்ளூர், இராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள். புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Rains

நாளை (16.10.2024)  வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஒரிரு இடங்களில் அதி கனமழையும் இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

 வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெதர்மேன் அலர்ட்

இதனிடையே சென்னை மழை தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்  முழுவதும் கனமழை பதிவாகியுள்ளது, அடுத்த மழைக்காக மேக்க்கூட்டங்கள் இந்த பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று அதிக மழை பெய்யும், நாளைய தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னை கடற்கரை அருகே வட தமிழகத்தை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார். 

weather man

தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் அப்டேட்டில், மழை மேகங்கள் பலவீனமடைவதாக நான் நினைக்கவில்லை. அது மேலும் மேலும் மேகங்கள் குவிந்து அசையாமல்உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த மழை தொடர்பான அறிவிப்பு யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல. தற்போது பெய்து வரும்  மழையின் இடைவெளி இருக்காது போல் தெரிகிறது. எனவே  மேகங்கள் மேலும் மேலும் குவியும், மேலும் குறைந்தது 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்.எனவே, அலுவலகத்திற்கு வந்தவர்கள் சீக்கிரம் கிளம்பலாம்.  நாளையும் மழை மேலும் வலுப்பெறும்.  சென்னையில் நள்ளிரவில் இருந்து தற்போது வரை சில பகுதிகளில் 200 மிமீ வரை மழை பெய்துள்ளது என தெரிவித்துள்ளார். 
 

click me!