காற்றழுத்த தாழ்வு பகுதி! 'இந்த' மாவட்டங்களில் வெளுத்துக் கட்டப்போகும் கனமழை!
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Heavy rains in Tamilnadu: தமிழ்நாட்டில் கோடை வெயில் கடுமையாக வாட்டி வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம், வேலூர் என மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தினமும் 35 டிகிரி செல்சிஸ்க்கு மேல் வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதனால் வருணபகவான் கருணை காட்ட மாட்டாரா? என மக்கள் ஏங்கித் தவித்து வந்த நிலையில், சில இடங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.
திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, கரூர், சிவகாசி ஆகிய இடங்களில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் நாளை இரவுக்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
கொட்டிக்கிடக்கும் தக்காளி வெங்காயம்.! போட்டி போட்டு அள்ளிச்செல்லும் மக்கள்.! ஒரு கிலோ இவ்வளவுதானா.?
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஏப்ரல் 7ம் தேதி (இன்று) முதல் 11ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஓட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று வெப்பநிலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இன்று (ஏப்ரல் 7) அந்தமான் கடல் பகுதிகள், அதை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும். நாளை (ஏப்ரல் 8) அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக் கடலின் கிழக்கு பகுதிகள் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் கே.என் நேருவிற்கு ஸ்கெட்ச் போட்ட அமலாக்கத்துறை.! வீட்டை சுற்றிவளைத்து சோதனை