மீண்டும் தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கப்போகுதா? வானிலை மையம் சொல்வது என்ன? பரபரப்பு தகவல்!

Published : Dec 19, 2024, 02:46 PM ISTUpdated : Dec 19, 2024, 02:50 PM IST

Tamil Nadu Weather Update: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

PREV
15
 மீண்டும் தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கப்போகுதா? வானிலை மையம் சொல்வது என்ன? பரபரப்பு தகவல்!
Northeast Monsoon

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்தாலே பொதுமக்கள் பீதி அடையும் அளவுக்கு மரண பயத்தை மழை காட்டி விட்டு சென்றது. இந்நிலையில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப்போகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

25
Tamilnadu Heavy Rain

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 12 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் வடதமிழக- தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: Vijay - Trisha Photo viral: விஜய் - த்ரிஷா பிரைவேட் போட்டோ வைரல்! மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை!

35
Tamilnadu Rain

இதன் காரணமாக இன்று வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 

45
Tamilnadu Weather

நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதேபோல் 21 முதல் 25ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க:  Ration Shop Holidays :பொதுமக்களுக்கு முக்கிய செய்தி! தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு 11 நாட்கள் விடுமுறை!

55
Chennai Rain

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஓட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சிய ஓட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories