மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கப்போகும் மழை.. அதுவும் இடி மின்னலுடன்.. எப்போது? எந்தெந்த மாவட்டங்களில்?

Published : Mar 26, 2026, 03:14 PM IST

TN Weather Update: இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 28 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

PREV
15
சுட்டெரிக்கும் வெயில்

தமிழகத்தில் பொதுமக்கள் வெளியில் தலைக்காட்டாத அளவிற்கு வெயில் பட்டையை கிளப்பி வருகிறது. கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மழை குறித்து சென்னை வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது.

25
இடி மின்னலுடன் கனமழை

அதாவது இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 28 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் மார்ச் 29 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

35
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை

மார்ச் 30 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 1 மற்றும் ஏப்ரல் 1 தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை தெரிவித்துள்ளது.

45
வெப்பநிலை எச்சரிக்கை

மார்ச் 27 முதல் 30 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என கணித்துள்ளது.

55
சென்னை வானிலை அப்டேட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories