Heavy Rain: கோடை வெயிலுக்கு இடையே இடி, மின்னலுடன் ருத்தரதாண்டவம் ஆடிய பேய் மழை! பதறிய பொதுமக்கள்! சாய்ந்த மின் கம்பங்கள்!

Published : May 27, 2026, 11:49 AM IST

Tamilnadu Rain: தமிழகத்தில் கத்திரி வெயில் நாளையுடன் முடிவடையும் நிலையில், சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், தென்மேற்கு பருவமழை தாமதமாவதால் ஜூன் 5ம் தேதி வரை வெப்பத்தின் தாக்கம் தொடரக்கூடும்.

PREV
16
அக்னி நட்சத்திரம்

தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதலே வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. இதனிடையே ஏப்ரல் மாதம் கோடை வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருந்து வந்தது. பின்னர் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதை அடுத்து பல்வேறு இடங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் சதம் அடித்தது. நேற்று சென்னை மீனம்பாக்கம், திருத்தணி, வேலூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் 100 டிகிரியை தாண்டியது. இதனால் பகல் 8 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர்.

26
கனமழை எச்சரிக்கை

இந்நிலையில் வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் நாளையுடன் முடிவடைய உள்ளது. இதனையடுத்து வரும் நாட்களில் வெயில் தாக்கம் எப்படி இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது நேற்று கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது.

36
இடி, மின்னலுடன் கனமழை

அதன்படி நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, ஆலம்பூண்டி, நல்லாண் பிள்ளை பெற்றாள், புத்தகரம், சே.பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய காற்றுடன் கனமழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் நேற்று இரவு நல்லாண் பிள்ளை பெற்றாள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் இரவு பகல் பராமல் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

46
திருவண்ணாமலையில் கனமழை

அதேபோல் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் கோடை வெயில் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. கடும் வெயிலால் வெந்து தணிந்து வந்த பொதுமக்கள் இந்த கோடை குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

56
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்

இதனிடையே டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்: அந்தமான் தீவுகளில் மே 16ம் தேதி துவங்கிய தென்மேற்கு பருவக்காற்று கேரளாவிலும் முன்னதாக துவங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அரபிக்கடலில் நிலவும் காற்று சுழற்சியால் பருவக்காற்று வந்தடைவதற்கு சாதக நிலை இல்லை. இதன் காரணமாக பருவமழை தாமதமடைந்து ஜூன் 3 அல்லது 4ம் தேதி ஒட்டி துவங்க வாய்ப்புள்ளது.

66
தென்மேற்கு பருவமழை எப்போது?

பருவமழை துவக்கம் தீவிரமாக இல்லாமல் வலுகுறைந்தே காணப்படும். இயல்பாக ஜூன் 1ம் தேதி கேரளா, தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை துவங்குவது இயல்பு. இதன் காரணமாக தமிழ்நாட்டில் நிலவும் வெப்பத்தின் தாக்கம் ஜூன் 5ம் தேதி வரை தொடரக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories