Jothimani Vs TVK Vijay: விஜய் எல்லாத்துக்கும் உங்களுக்கு ஆதரிக்க முடியாது.. பாஜக வழியில் தவெக.. கொதிக்கும் ஜோதிமணி!

Published : May 27, 2026, 07:12 AM ISTUpdated : May 27, 2026, 07:21 AM IST

Jothimani: இந்தியாவில் ஜனநாயகத்தையும், காங்கிரஸ் கட்சியையும் பலவீனப்படுத்த பாஜக குதிரை பேரத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதாக கரூர் எம்.பி. ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார். குதிரை பேர அரசியலை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஆதரிக்காது.

PREV
15
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி

இந்தியாவில் ஜனநாயகத்தை, காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த பாஜக முதலில் கையில் எடுத்த ஆயுதம் குதிரை பேரம் என ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ளது. ஆட்சியில் பங்கெடுத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் மக்கள் த.வெ.க வின் தலைவர் C. ஜோசப் விஜய் அவர்களை முதலமைச்சராக்கியுள்ளார்கள். அவர் ஒரு சிறப்பான அரசாங்கத்தை தரவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவரும் அதைப் புரிந்துகொண்டு செயல்படுகிறார் என்பதற்கான முகாந்திரங்கள் தெளிவாகத் தெரிகிறது.

25
காங்கிரஸ் கட்சி ஆதரிக்க முடியாது

தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியைத் தருவதற்கு ஒரு கூட்டணி கட்சியாக நிச்சயம் நாம் அவருக்குத் துணை நிற்போம். ஆனால் அதற்காக த.வெ.க தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்க முடியாது. அந்த வழிமுறைகள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக இருக்கவேண்டும். பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது . இம்மாதிரியான சூழலில் மாற்றுக் கருத்துகள் நமக்கு இருக்குமேயானால் அதைத் தயங்காமல் வெளிப்படுத்துவதுதான் தார்மீக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சரியானது. தோழமை சுட்டுதல் என்று தமிழ் இலக்கியம் அதை அழகாகச் சொல்கிறது.

35
குதிரைபேர அரசியல்

குதிரைபேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது. இந்தியாவில் ஜனநாயகத்தை, காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த பாஜக முதலில் கையில் எடுத்த ஆயுதம் குதிரை பேரம். மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்த பல்வேறு மாநிலங்களில் பாஜக மக்கள் தீர்ப்பிற்கு எதிராக, குதிரை பேரத்தைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியாமலும், அமைத்தாலும் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியாமலும் தடுத்து வருகிறது.

45
இரட்டை நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுக்காது

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி குதிரை பேரத்தை ஆதரிக்கும், தமிழ்நாட்டிற்கு வெளியே எதிர்க்கும் என்கிற இரட்டை நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் எடுக்கமுடியாது. ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் ஒரு சக்தியாக காங்கிரஸ் கட்சி செயல்பாடுமேயானால் அது காந்திக்கும், நேருவுக்கும் ,கொண்ட கொள்கைக்கும் செய்கிற வரலாற்றுத் துரோகமாக மாறிவிடும். தலைவர் ராகுல்காந்தி கொள்கைக்காக சமரசமற்றுப் போராடி வருகிற சூழலில் அந்தப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அதை ஏற்கமுடியாது என ஜோதிமணி ஆவேசமாக கூறியுள்ளார்.

55
மாணிக்கம் தாகூர் விஜய்க்கு ஆதரவு

முன்னதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மக்களின் தீர்ப்பை ஏற்க முடியாமல் இன்று நாடகம் ஆடுவது யார் என்பதை தமிழ்நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது. 107 எம்.எல்.ஏக்களுடன் விஜய்க்கே மக்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்தார்கள். உங்களிடம் இருந்தது 59 எம்.எல்.ஏக்கள் மட்டுமே மக்கள் உங்களை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள். ஆனால் என்ன நடந்தது? இப்போது மூன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் இடங்களை ராஜினாமா செய்து, வெளிப்படையாக த.வெ.க-வில் சேர்ந்திருக்கிறார்கள். இது மக்கள் முன்னிலையில் நடந்த அரசியல் முடிவு. இதில் ஏன் இவ்வளவு கதறல்? மக்களின் தீர்ப்பை மதிக்காமல் டெல்லி அதிகாரத்துடன் சேர்ந்து யார் விளையாடினார்கள், மக்களின் ஆட்சியை காப்பாற்ற யார் நின்றார்கள் என்பதை தமிழ்நாடு அறியும். மூன்று தொகுதி மக்களும் விரைவில் தீர்ப்பு சொல்லட்டும் என்று விஜய்க்கு ஆதரவாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories