தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் சொல்ல முடியாத அளவுக்கு துயரம் அடைந்தனர். பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வந்தனர். இந்நிலையில் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்கியதில் எப்படி இருக்க போகிறதோ என்று பொதுமக்கள் அஞ்சு நடுங்கினர். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு வெயில் இல்லாததால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
24
தென்மேற்கு பருவமழை
இந்நிலையில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த ஒரிரு தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதேபோல் அரபிக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
34
லேசானது முதல் மிதமான மழை
இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில லேசான பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது (பகல் 1 மணி வரை) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.