அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் அலறவிடப்போகுதாம் மழை? அலர்ட் கொடுக்கும் வானிலை மையம்!

Published : Apr 09, 2025, 09:45 AM ISTUpdated : Apr 09, 2025, 11:02 AM IST

TN Weather Update: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

PREV
14
அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் அலறவிடப்போகுதாம் மழை? அலர்ட் கொடுக்கும் வானிலை மையம்!
Tamilnadu Rain

காற்றழுத்த தாழ்வு பகுதி 

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி மத்திய வங்கக்கடல் பகுதிகளில் படிப்படியாக வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக இன்று மற்றும் நாளை வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

24
heatwave in tamilnadu

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 

இன்று மற்றும் நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். அதேபோல் இன்றும் நாளையும் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

இதையும் படிங்க: காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா? தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கப்போகுதா? வானிலை நியூ அப்டேட்!

34
Chennai Weather

சென்னை வானிலை நிலவரம்:

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28°  செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க:  ஷாக்கிங் நியூஸ்! சென்னையில் ஜிம் பயிற்சியாளரால் துடிதுடித்து உயிரிழந்த இளைஞர்! கதறிய குடும்பம்! நடந்தது என்ன?

44
Rain Alert

அடுத்த 3 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் மழை

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது காலை 10 மணிவரை கரூர், திருப்பூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories