கோவை மட்டுமல்ல இந்த மாவட்டங்களிலும் கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுதாம் மழை! வானிலை மையம்!

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை வானிலை மையம் வெப்பநிலை பற்றியும் அறிவித்துள்ளது.

Heavy rain warning in 4 districts including Coimbatore tvk
Chennai Meteorological Department

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

நேற்று  தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய  மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 8.30 மணியளவில் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு திசையில், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நகர்ந்து, அதற்கடுத்த  24  மணி நேரத்தில்  வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி, மத்திய வங்கக்கடல் பகுதிகளில்  படிப்படியாக வலுகுறையக்கூடும்.  மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது.

Heavy rain warning in 4 districts including Coimbatore tvk
Coimbatore Rain

கனமழை பெய்யும் மாவட்டங்கள்

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய  (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


Heavy rain

இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை

அதேபோல் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் ஏப்ரல் 11 மற்றும் 12 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். TN Heavy rain

Tamilnadu Rain News

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை

ஏப்ரல் 13 முதல் 15ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் அலறவிடப்போகுதாம் மழை? அலர்ட் கொடுக்கும் வானிலை மையம்!

heatwave

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 

இன்று முதல் ஏப்ரல் 11ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ்  வரை படிப்படியாக உயரக்கூடும்.heatwave

Summer

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச  வெப்ப அளவின் வேறுபாடு:  

இன்று முதல் ஏப்ரல் 11ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை  விட அதிகமாக இருக்கக்கூடும். இன்று அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும்  இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

இதையும் படிங்க:  காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா? தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கப்போகுதா? வானிலை நியூ அப்டேட்!

Chennai weather

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை  35-36°  செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28°  செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை  36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. Chennai weather

Latest Videos

vuukle one pixel image
click me!