12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி மார்ச் 27ம் தேதி முடிவடைந்தது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் 83 மையங்களில் விடைத்தாள் திருத்துதல் பணிகள் ஏப்ரல் 4ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதியும், மே 19ம் தேதியும் வெளியாக உள்ளது.