Heavy Rain: பகலில் வெயில்! மாலையில் மழை! கோவை உட்பட 12 மாவட்டங்களுக்கு.. வானிலை மையம் கொடுத்த கூல் அப்டேட்!

Published : May 19, 2026, 03:18 PM IST

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை எச்சரிக்கை.

PREV
16
கோடை மழை

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதலே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மே தொடங்கியதில் இருந்து பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். இந்நிலையில் பகலில் வெயில் மண்டையை பொளந்தாலும் மாலை அல்லது இரவு நேரங்களில் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கோடை மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, சேலம், குமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

26
சென்னை வானிலை மையம்

அதாவது சுமார் 1.5 கிமீ உயரத்தில், கிழக்கு உத்ர பிரதேசம் முதல் லட்சத்தீவு வரை, மத்திய மகாராஷ்டிரா, மராத்த்வாடா, உள் கர்நாடகம் மற்றும் கேரளம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. அதேபோல் சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கி மீ.உயரத்தில், தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனைச் ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் இருந்து தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் வரை, கேரளம் தெற்கு உள் கர்நாடகம் மற்றும் ராயலசீமா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

36
இன்று 12 மாவட்டங்களில் கனமழை

இதன் காரணமாக இன்று கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும்.

46
இடி மின்னலுடன் கனமழை எச்சரிக்கை

அதேபோல் நாளை நீலகிரி, கோயம்புத்தூர். தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

56
மே 21ம் தேதி எந்தெந்த மாவட்டங்களில் மழை

மேலும் மே 21ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள்தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

66
சென்னையில் இடி, மின்னலுடன் மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories