CM Vijay to Meet PM Modi: டெல்லி பறக்கும் முதல்வர் விஜய்! பிரதமர் மோடியிடம் பேசப்போவது என்ன?

Published : May 19, 2026, 02:27 PM IST

CM Vijay to Meet PM Modi: தமிழக முதல்வர் விஜய் மே 22ம் தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். விஜய் பிரதமரிடம் என்னென்ன கோரிக்கைகள் வைக்க உள்ளார்? என்பது குறித்து பார்க்கலாம்.

PREV
14
தவெக ஆட்சி; முதல்வர் விஜய்

தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பமாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. விஜய் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வராக பதவியேற்றவுடன் அரசியல் எதிரிகளான முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை சந்தித்து அரசியல் நாகரீகத்தை பறைசாற்றினார்.

பிரதமர் மோடியை சந்திக்கும் விஜய்

இந்த நிலையில், முதல்வர் விஜய் மே 22ம் தேதி தனது முதல் அரசுமுறைப் பயணமாக படெல்லிக்கு சென்று, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சஙகர் ஆகியோரையும் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, நாட்டின் பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுவதும், மரியாதை நிமித்தமாக உரையாடுவதும் ஒரு மரபார்ந்த நடைமுறையாகும். அந்த அவகையில் விஜய் செல்வதாக கூறப்பட்டாலும் பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை விஜய் முன்வைக்க உள்ளார்.

24
தமிழக நிதி, மெட்ரோ ரயில் திட்டங்கள்

அதாவது புதிய அரசு அமைந்துள்ள சூழலில், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான மத்திய அரசின் நிதியைப் பெறுவது குறித்து இந்த சந்திப்பின்போது விஜய் பேச உள்ளார். அதாவது மெட்ரோ ரயில் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கான மத்திய நிதி ஒதுக்கீடு குறித்து பேச இருக்கிறார். மேலும் தமிழகத்திற்கான நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி (GST) இழப்பீட்டுத் தொகை மற்றும் பிற மானியங்கள் குறித்து கோரிக்கை மனுவும் சமர்ப்பிக்க உள்ளார்.

34
மீனவர்கள் பிரச்சனை

தான் பதவியேற்ற சில நாட்களிலேயே, இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியிருந்தார். இச்சந்திப்பில், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பாதுகாப்பது மற்றும் கைது நடவடிக்கைளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்தும் பிரதமரிடம் வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

44
கல்வி நிதி விடுவிக்கப்படுமா?

தமிழகம் புதிய கல்விக்கொள்கையை ஏற்காததால் மத்திய அரசு கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக கல்வி நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இது தொடர்பாகவும் முதல்வர் விஜய் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடியாக கோரிக்கை விடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒட்டுமொத்தத்தில் முதல்வர் விஜய்யின் முதல் டெல்லி பயணம் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories