TN Rain Alert: குடை இல்லாமல் வெளியே போகாதீங்க! இந்த 10 மாவட்டங்களில் 3 மணிநேரத்தில் அடிச்சு ஊத்தப்போகும் மழை!

Published : Aug 22, 2023, 09:54 AM IST

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

PREV
13
TN Rain Alert: குடை இல்லாமல் வெளியே போகாதீங்க! இந்த 10 மாவட்டங்களில் 3 மணிநேரத்தில் அடிச்சு ஊத்தப்போகும் மழை!

கடந்த சில நாட்களாக கோடை வெயிலை மிஞ்சும் வகையில்  வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால், வெயிலுக்கு பயந்து பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. 

23

அதேபோல் நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல்,  மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சென்னையை பொறுத்தவரை வானம் மேமூட்டத்துடன் நகரின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது  மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது. 

33

இந்நிலையில், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, அரியலூர், திண்டுக்கல், கரூர், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories