பெத்த இதே கையால.. ரத்தத்தோட ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு போனேன்.. யாரும் உதவ முன் வரவில்லை.. தாய் கதறல்..!

First Published | Aug 22, 2023, 9:22 AM IST

சென்னை அருகே தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுமி தாய் கண்முன்னே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

chennai accident

சென்னை அருகே கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கீர்த்தி. இவரது மகள் லியோரா ஸ்ரீ(10). வழக்கம் போல இருசக்கர வாகனத்தில் மகளை பள்ளியில் விட அழைத்து சென்றுள்ளார். அப்போது, போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து சென்றுக்கொண்டிருந்தன. போக்குவரத்து நெரிசல் சீரான நேரத்தில் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் இருந்து கீர்த்தியும், அவரது குழந்தையும் கீழே விழுந்துள்ளனர். 

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி சிறுமியின் மீது ஏறி இறங்கியது. இதில், உடல் நசுங்கி  சிறுமி ரத்த வெள்ளத்தில் தாய் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Tap to resize

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவம் குறித்து தாய் கீர்த்தி கூறுகையில்;- இருசக்கர வாகனத்தில் கீழே விழுந்ததும் எங்களை துக்குவதற்கு யாரும் முன்வரவில்லை. நானேதான் என் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன் கண்ணீர் மல்க கூறினார்.

Latest Videos

click me!