Tomato price
தக்காளி விலை என்ன.?
தக்காளி விலை தங்கத்துக்கு நிகராக கடந்த மாதம் முழுவதும் அதிகரித்து வந்தது. இதுவரை இல்லாத உச்சமாக ஒரு கிலோ தக்காளி 200 ரூபாயை தொட்டது. இதனையடுத்து கிலோ கணக்கில் பொதுமக்கள் தக்காளி வாங்கிய நிலை மாறி எண்ணிக்கையில் தக்காளியை வாங்கிச்சென்றனர். மேலும் வீடுகள் மற்றும் ஓட்டல்களில் தக்காளி சாதம், தக்காளி சட்னி, தக்காளி தொக்கு போன்ற உணவுகளை தயாரிப்பதை முற்றிலுமாக தவிர்த்தனர். இல்லத்தரசிகளோ தக்காளி இல்லாத உணவுகளை சமைக்க தொடங்கினர். இந்தநிலையில் தக்காளி விலையை கட்டுப்பட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
Tomato price hike
நியாயவிலைக்கடையில் தக்காளி விற்பனை
ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனையானது. இருந்து போதும் பெரும்பாலான மக்களுக்கு தக்காளி கிடைக்காத காரணத்தால் வெளி சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்தநிலையில் தான் 200 ரூபாய் என்ற உச்சத்தை தொட்ட தக்காளி விலை படிப்படியாக குறைய தொடங்கியது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 200 ரூபாயில் இருந்து குறைந்து 180, 150 என்ற விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை ஒரு கிலோ 100 என்ற அளவில் கடந்த வாரம் விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி விலை அதிகரிப்புக்கு காரணம் என்ன
இதனையடுத்து மீண்டும் படிப்படியாக குறைந்த தக்காளி விலை நேற்று முன் தினம் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று 10 ரூபாய் குறைந்து 30 ரூபாய்க்கு தக்காளி விற்பனையானது.இந்தநிலையில் இன்று மீண்டும் தக்காளி விலை ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் அதிகரித்து மீண்டும் 40 ரூபாய்க்கு விற்பனையானது. வெளி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறுத. தக்காளி விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு 5 முதல் 10 ரூபாய் வரை கடந்த காலங்களில் விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி விலை 10 ரூபாய் அதிகரிப்பு
இதன் காரணமாக விவசாயிகள் தக்காளியை பயிர் செய்து இழப்பை சந்தித்தனர். இதன் காரணமாக இந்த ஆண்டு தக்காளி உற்பத்தி செய்வதை தவிர்த்து மாற்று பயிர் செய்ய தொடங்கியதால் தக்காளி விலை அதிகரித்ததாக கூறினர். மேலும் கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 1100 டன் தக்காளி வந்தநிலையில் கடந்த மாதம் 300 டன் தக்காளியே வந்ததால் விலை அதிகரிக்க காரணம் என கூறுகின்றனர். தற்போது நாள் ஒன்றுக்கு 700 முதல் 800 டன் தக்காளி வரத்து வருவதால் தக்காளி விலை குறைந்து வருவதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.