நியாயவிலைக்கடையில் தக்காளி
இந்தநிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தக்காளி வாங்கவும் தமிழக அரசு சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 500 நியாயவிலைக்கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இருந்த போதும் பெரும்பாலான மக்களுக்கு தக்காளி குறைந்த விலையில் கிடைக்காத காரணத்தால் வெளி சந்தையில் தக்காளி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தக்காளி விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அந்த வகையில் தக்காளிக்கு உரிய வகையில் வருவாய் கிடைக்காததால் மாற்று பயிருக்கு விவசாயிகள் மாறியது தான் விலை உயர்வுக்கு காரணம் என தெரிவிக்கின்றனர்.