சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 24ம் தெதி தமிழகத்தின் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியப் பகுதிகளில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது தெற்கே வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. இந்த தாழ்வு பகுதியானது மேலும் வலுவடைந்து தமிழகத்தின் கடலோரத்தில் வடக்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளதால் கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வருகின்ற 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.