ரெஸ்டே கொடுக்காத கனமழை.. புதுவை, தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Published : Nov 24, 2025, 06:51 AM IST

தொடர் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு வெளியாகி வருகிறது.

PREV
14
கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடலில் வருகின்ற புதன்கிழமை சென்யார் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, திருநெல்வேலி, ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு திங்கள் கிழமை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

24
காற்றழுத்த தாழ்வு பகுதி

மேலும் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ளப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சூழற்சி ஞாயிற்றுக் கிழமை உருவானது. இதன் காரணமாக குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி செவ்வாய் கிழமை உருவாகக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

34
கனமழை எச்சரிக்கை

திருநெல்வெலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாயப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

44
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை மணோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த செமஸ்டர் தேதிகள் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான மறு தேதி அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம், திருவாரூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை, நாகை, கரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories