Tirunelveli Heavy Rains தொடரும் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த சில மணி நேரமாகப் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. நகர்ப்புறங்கள் முதல் கிராமப்புறங்கள் வரை இடைவிடாது பெய்து வரும் மழையின் காரணமாகத் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
23
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் நாளை (24.11.2025) திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
33
மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வ உத்தரவு
இது குறித்துத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. இரா.சுகுமார் இ.ஆ.ப (Dr. R. Sukumar IAS) அவர்கள் வெளியிட்டுள்ள உத்தரவில், "மாவட்டத்தில் நிலவும் கனமழைச் சூழலைக் கருத்தில் கொண்டு, நாளை ஒரு நாள் மட்டும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மழைக் காலங்களில் பாதுகாப்பாக இருக்குமாறும், நீர்நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.