பள்ளி மாணவர்களுக்கு முக்கிய செய்தி! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

First Published | Nov 27, 2024, 11:47 PM IST

Half Yearly Practice Exams: தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 2 முதல் 6ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும். அரையாண்டு எழுத்து தேர்வுக்கு முன்பாக இந்த தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Half Yearly Exam

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. அதில், அரையாண்டு தேர்வு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9ம் தேதி தொடங்கி டிசம்பர் 23ம் தேதி முடிவடைகிறது. அதேபோல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10ம் தேதி தொடங்கி டிசம்பர் 23ம் தேதி முடிவடைகிறது. 

School Student

இதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இதனிடையே தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. 

Tap to resize

School Practical Exam

இந்நிலையில் அரையாண்டு எழுத்து தேர்வுக்கு முன்பாக 10, 11, 12ம் வகுப்புகளுக்கு டிசம்பர் 2 முதல் 6ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

school Education Department

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்விற்கான செய்முறைத் தேர்வுகளை வருகிற டிசம்பர் 2-ம் தேதி(திங்கள் கிழமை) முதல் டிசம்பர் 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை)க்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

Half Year Practical Exam

இதற்கு தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ள தலைமை தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி அனைத்து பள்ளிகளிலும் மேற்கொண்ட வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!