அப்பாடா! தப்பித்த 4 டெல்டா மாவட்டங்கள்! வானிலை மையம் சொன்ன குட்நியூஸ்!

First Published | Nov 27, 2024, 10:59 PM IST

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயலால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Heavy Rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே அதாவது கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து சென்னை, தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை  பெய்து வந்தது. இந்நிலையில்  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று புயலாக வலுப்பெறும்.  இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது.

Tamilnadu Heavy rain

இதன் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. 

இதையும் படிங்க: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா? வெளியான அறிவிப்பு!

Tap to resize

Fengal Cyclone

விடால் கனமழை பெய்து வருவதால் நாகை மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வங்ககடலில் புயல் உருவாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதால் அடுத்த 12 மணி நேரத்திற்குள் புயல் உருவாகும். மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வேகம் குறைந்து 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. நாகைக்கு 320 கி.மீட்டர், சென்னைக்கு 500 கி.மீ. தொலைவிலும் புயல் நிலைக்கொண்டுள்ளது. 

Red Alert Withdrawal

இதனால், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய 4 மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதை அடுத்து பொதுமக்கள் நிம்மதி பெரு மூச்சுவிடுகின்றனர். 

Latest Videos

click me!