அதிர்ச்சி..டன் கணக்கில் கிரீஸ் டப்பா..! விஜய் மாநாட்டில் தொண்டர்களின் வெள்ளை சட்டை காலி

Published : Aug 21, 2025, 01:07 PM IST

மதுரையில் விஜய் தலைமையிலான தவெக இரண்டாவது மாநில மாநாட்டை நடத்துகிறது. தொண்டர்கள் உற்சாக மிகுதியில் கம்பி வேலி அருகே செல்லாமல் தடுக்கும் வகையில், ராம்ப் வாக் மேடை அருகே அமைக்கப்பட்டுள்ள வேலியில் கிரீஸ் பூசப்பட்டு வருகிறது.

PREV
14
மதுரையில் விஜய் மாநாடு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி மக்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் பல ஆண்டுகாலமாக ஆட்சியை மாறி மாறி பிடித்து வரும் திமுக- அதிமுகவிற்கு மாற்றாக களத்தில் இறங்கியுள்ளது தவெக, 

நடிகர் விஜய் அரசியல் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார். விஜய் செல்லும் இடமெங்கும் தானாக சேரும் கூட்டமாக பல லட்சம் பேர் கூடி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் மிகப்பிரம்மாண்ட முதல் மாநாட்டை விஜய் நடத்தி அசத்தினார்.

24
குவியும் தவெக தொண்டர்கள்

தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலமே உள்ள நிலையில் மதுரையில் இரண்டாவது மாநில மாநாட்டை இன்று நடத்தவுள்ளார். இந்த மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி என்ற இடத்தில் 506 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் தண்ணீர் இல்லாமல் பாதிக்க கூடாது என்பதற்காக 750-க்கும் மேற்பட்ட குழாய்கள் மூலம் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. RO நீர் வசதியும் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் பல ஆயிரம் தொண்டர்கள் மாநாடு பகுதியில் குவிந்து வருகிறார்கள். இன்று காலையே மாநாடு திடல் முழுவதும் மக்கள் தலையாகவே காட்சி அளிக்கிறது.

34
தொண்டர்களை சந்திக்க விஜய் ராம்ப் வாக்

இன்று மாலை 4 மணிக்கு மாநாடு நடைபெறவுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் தொண்டர்களை சந்திக்கும் வகையில் 300 மீட்டர் நீளமுள்ள ராம்ப் வாக் மேடை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டின் போது தொண்டர்களை சந்திக்க விஜய் ராம்ப் வாக் மேடையில் நடந்து வந்த போது அருகில் இருந்து கம்பியை பிடித்து விஐய் அருகில் சென்றனர். 

இதனால் பதற்றமான நிலை நீடித்தது. எனவே இந்த முறை இதனை தடுக்கும் வகையில் ராம்ப் வாக் மேடை அருகே அமைக்கப்பட்டுள்ள இருப்பிலான வேலியின் கிரிஸ் பூசப்பட்டு வருகிறது.

44
வேலி கம்பியில் கிரீஸ்

சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த ராம்ப் வாக் பகுதியை சுற்றியுள்ள வேலியில் கிரீஸ் தவெக நிர்வாகிகளால் தடவப்பட்டு வருகிறது. பல டன் கணக்கில் டின்களில் கொண்டு வரப்பட்ட கிரீஸ்கள் பூசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொண்டர்கள் உற்சாக மிகுதியில் கம்பி வேலி அருகே சென்றாலே உடல் முழுவதும் கிரீஸ் பட்டுவிடும். எனவே வெள்ளை நிற சட்டையில் உற்சாகமாக வந்துள்ள தவெக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories