
தமிழக அரசு என்ன தான் திட்டங்களை மக்களுக்காக அறிவித்தாலும் அந்த திட்டங்கள் மக்களை சென்று சேர அரசு ஊழியர்களின் பணி முக்கியமானது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இருந்த போதும் தற்போது முக்கிய கோரிக்கையாக இருப்பது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தான்.
இதனையடுத்து பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய 3 ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, சென்னை பொருளாதார கல்வி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் சண்முகம் மற்றும் நிதித்துறை துணை செயலர் பிரத்திக் தயாள் ஆகியோர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.
இந்த குழுவானது 9 மாத காலத்திற்குள் எந்த ஓய்வூதியம் ஊழியர்களுக்கு சிறந்தது என அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து சென்னை தலைமை செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஓய்வூதியம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட அரசு குழு மற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது. அப்போது அரசு ஊழியர்கள் சங்கங்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.10 சங்கங்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கையை எடுத்துரைத்தனர்.
1. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ஒட்டு மொத்த தொகையை ஓய்வூதியமாக பெறுவதால், அத்தொகையை ஓய்வு பெறுபவர் தனது மகள்கள் மற்றும் மகன்கள் படிப்பிற்கு செலவு செய்துவிடலாம் (அல்லது) தனது மகள்கள் மற்றும் மகன்கள் திருமணத்திற்கு செலவு செய்துவிடலாம் (அல்லது) வீடு கட்டி தன்னுடைய மகன்கள் மற்றும் மகள்களுக்கு கொடுத்துவிடலாம் (அல்லது) தன்னுடைய மருத்துவ செலவிற்கோ அல்லது தன்னை சார்ந்த இரத்தம் சம்பந்தப்பட்ட உறவினருக்கு பெரும் மருத்துவ செலவினை செய்யும் சூழ்நிலை ஏற்படலாம்.(
அல்லது) ஓய்வு பெற்ற நபரிடமிருந்து மகனோ அல்லது மகளோ அல்லது வேறு உறவினரோ ஓட்டுமொத்த தொகை ஆசை வார்த்தைக் கூறியோ அல்லது ஏமாற்றியோ அல்லது கொடூரமான முறையில் கொலை செய்தோ பெற நினைக்கும் போது 30 வருடங்களுக்கு மேல் பணியாற்றி ஓய்வு பெறும் அரசு அலுவலருக்கு அரசால் வழங்கப்படும் ஒட்டு மொத்த தொகை பயனற்றதாகிவிடுகிறது. மேலும் தொடர் மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டு வரும் ஓய்வூதியதாராக இருந்தால், அவருடைய நலன் மிகவும் பாதிக்கப்படும்.
2. தற்போது வரை பங்களிப்பு திட்டத்தில் பிடித்தம் செய்யும் தொகை தமிழ்நாடு இந்த நிதிநிலை அறிக்கையில் தான், அத்தொகையினை இந்திய ஆயள் காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அது எந்தவகையான முதலீட்டில் தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது மற்றும் அதற்கான Returns and Sum Assured என்ன என்பதை முழுமையாக தெளிவுபடுத்தப்படாததால் 30 வருடங்களுக்கு மேல் பணியாற்றி ஓய்வு பெறும் அரசு அலுவலர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்கும் அடிப்படை சலுகைகளை கூட பெற முடியாத சூழ்நிலை ஏற்படும் நிலையில் உருவாகி எதிர்காலம் கேள்வி குறியாகி விடுகிறது.
3. பங்களிப்பு திட்டத்தில் பிடித்தம் செய்யும் சந்தா தொகையை அரசு இந்நாள் வரை மத்திய அரசின் Pension Fund Regulatory and Development Authority (PFRDA) L ញ ល ពេលប់ செய்யாததால், தற்சமயம் 2003 முதல் தற்போது வரை அரசின் வசம் உள்ள சந்தா தொகையை மத்திய அரசிடம் வைப்பீடு செய்வது என்பது சாத்தியமில்லாததாகும். மேலும் மத்திய அரசு, பங்களிப்பு ஓய்வூதியதாரர்களுக்கும் பணிக்கொடை உண்டு என்ற அறிவிப்பு மற்றும் இதர சலுகைகளையும் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.
4. பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் ஆண் ஒருவர் இறக்கும் பட்சத்தில் அவருடைய மனைவிக்கு (அல்லது) பெண் ஒருவர் இறக்கும் பட்சத்தில் அவருடைய கணவருக்கு குடும்ப ஓய்வூதியம் 30 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஓய்வூதியதாரின் குடும்பத்திற்கு பாதுகாப்புக்கு வழி வகை ஏற்படுகிறது.
1. Pension Fund Regulatory and Development Authority (PFRDA) សំ இந்நாள் வரை உறுப்பினராக பதிவு செய்யாததாலும், சந்தா மற்றும் வட்டித்தொகையை வைப்பீடு செய்யததாலும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திலிலுள்ள அனைத்து பணியாளர்களுக்கும், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றுவதற்கு மத்தியரசிடமிருந்து எந்தவிதமான அனுமதியும் பெற தேவையில்லை.
2. ஏற்கனவே தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட அரசாணை எண்: 288, நிதித் (ஊ.கு) துறை, நாள்: 10-11-206-ன்படி, தமிழ்நாடு அரசு தகவல் தரவு தொகுப்பு மையத்தினால், அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பங்களிப்பு ஓய்வூதிட்ட கணக்கு எண்ணை (CPS Account Number), பொது சேம நல நிதி கணக்காக (GPF Account Number) மாற்றுவது மட்டுமல்லாமல், அரசு அலுவலர்களிடம் பிடித்தம் செய்த சந்தா தொகை மற்றும் வட்டித் தொகை மற்றும் அரசின் சந்தா தொகை மற்றும் வட்டித் தொகை ஆகிய அனைத்தையும் பழைய பொது சேமநலநிதிக்கான சந்தா மற்றும் வட்டித்தொகையாக மாற்றம் செய்து கொள்ள வழிவகை செய்துள்ளது.
3. அரசு அலுவலர் ஒவ்வொருக்கும் அரசால் வழங்கப்படும் பங்களிப்பு மற்றும் வட்டித் தொகையை அரசே தன்வசம் வைத்துக் கொண்டு, அதனை நிதி நிறுவனத்திலோ அல்லது காப்பீட்டு நிறுவனத்திலே முதலீடாகவோ அல்லது வைப்பீடாகவோ அல்லது பங்குகளாகவோ சேமிக்கலாம். தற்போதைய நிலவரப்படி சுமார் ரூ.50,000/ கோடி ரூபாய் அரசின் பங்குகள் மற்றும் வட்டித் தொகைகள் அரசின் வசம் உள்ளது. இதனையும் சேர்த்து இனிவருங்களில் அரசு அலுவலர்களுக்கான அரசின் பங்குத் தொகையினையும் சேர்த்து முதலீடு செய்து,
அதன் மூலம் பெறும் லாபம் மற்றும் வட்டித்தொகையினைக் கொண்டு, ஓய்வு பெறும் அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியும். பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தின் மூலம் ஒட்டு மொத்த தொகை அரசு அலுவலர்களுக்கு ஒரே சமயத்தில் வழங்கி, அரசானது நிதிச் சுமையில் உள்ளாக்கப்படுவதற்கு பதிலாக, மாதந்தோறும் ஓய்வூதியமாக வழங்கி நிதிச் சுமையிலிருந்து விடுதலை பெறுவது தமிழ்நாடு அரசின் சிறப்பாக நிர்வாகத்திற்கு துணையாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.
4. அரசு அலுவலரின் சந்தா தொகையினை பொது சேமநலநிதி சந்தாவாக மாற்றம் செய்வதன் மூலம் அரசு அலுவலரால் அவரது கணக்கில் குறிப்பிட்டக் காலத்திற்கு ஒருமுறை தற்கால முன்பணமாகவோ அல்லது பகுதி இறுதித் தொகையாகவோ எடுப்பதன் மூலமாக அலுவலரின் தற்காலிக அடிப்படை தேவை நிறைவு பெறுவது மட்டுமல்லாமல், அவரது கணக்கில் உள்ள தொகையும் குறைவாக இருப்பதால், அதற்கு அரசால் வழங்கப்படும் வட்டித் தொகையின் கணக்கிடும் குறைவாகவே இருப்பதால் நிதிச்சுமையும் குறைவடைய வாய்ப்பு ஏற்படுகிறது.
5. அரசு பணியில் சேர்ந்து 30 ஆண்டுகளுக்கு பணியாற்றும் அலுவலர்களுக்கு அவர்களது கடைசியாக பெற்ற ஊயதியம் அல்லது கடைசியாக பெற்ற 12 மாதங்களின் சராசரி ஊதியம் ஆகியவற்றினை அடிப்படையாக கொண்டு முழு ஓய்வூதியம் வழங்க பரிந்துரை செய்யலாம். 30 முதல் 10 ஆண்டுகளுக்குள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்களின் தகுதியான பணிக்காலத்தினை அடிப்படையாகக் கொண்டு ஒய்வூதியத்தை நிர்ணயம் செய்யலாம். 10 ஆண்டுகளுக்கு குறைவாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, அவர்கள் எந்த பதவியில் பணிபுரிந்தார்களோ அப்பணிக்கான குறைந்தபட்ச ஓய்வூதியத்தை நிர்ணயம் செய்து வழங்கலாம் என அரசு ஊழியர்கள் சங்கங்கள் தங்களது கோரிக்கையை அறிக்கையாக அரசின் குழுவிடம் வழங்கியுள்ளனர்.