நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!

Published : Aug 19, 2025, 07:44 AM IST

ஸ்ரீநாராயண குரு பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 3 வட்டங்களுக்கு ஆகஸ்ட் 20ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் 13ம் தேதி பள்ளிகள் செயல்படும்.

PREV
15
பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். அதுவும் தொடர் விடுமுறை என்று வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் தமிழகத்தில் அரசு விடுமுறையை தவிர்த்து இனி அனைத்து சனி, ஞாயிறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்தந்த மாவட்டங்களில் பண்டிகை மற்றும் கும்பாபிஷேகம், முக்கிய திருவிழாக்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.

25
உள்ளூர் விடுமுறை

இந்த விடுமுறைக்கான உத்தரவை மாவட்ட அளவில் அந்தந்த ஆட்சியர்கள் முடிவு எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அன்றைய தினம் பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீநாராயண குரு பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 3 வட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

35
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்

இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: மகான் ஸ்ரீநாராயண குருவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு மற்றும் திருவட்டார் ஆகிய மூன்று வட்டங்களில் இயங்கும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

45
கல்வி நிறுவனங்கள் செயல்படும்

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை அதாவது (13.09.2025) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்படி மேற்படி மூன்று வட்டங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படும்.

55
அரசு அலுவலகங்கள்

மேற்கண்ட உள்ளூர் விடுமுறை தினமானது செலவாணி முறிச் சட்டம் 1881-இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் ஆகஸ்ட் 20ம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories