பார்க்கிங் 1-க்கு வரும் வாகனங்கள்:
குமரி, நெல்லை, தென்காசி: கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும்.
தூத்துக்குடி, விருதுநகர்: அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் வழியாக வர வேண்டும்.
ராமநாதபுரம்: பார்த்திபனூர், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும்.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை: சிவகங்கை, திருப்புவனம், அ.முக்குளம், மீனாட்சிபுரம், ஆவியூர் வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும்.
பார்க்கிங் 1ஏ-க்கு வரும் வாகனங்கள்:
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி: திண்டுக்கல், பாண்டியராஜபுரம், நாகமலைப்புதுக்கோட்டை, கப்பலூர் மேம்பாலம், மேலக்கோட்டை, கூடக்கோவில் வழியாக வர வேண்டும்.
தேனி: ஆண்டிபட்டி கணவாய், உசிலம்பட்டி, செக்காணூரணி, நாகமலைப்புதுக்கோட்டை, கப்பலூர், கூடக்கோவில் வழியாக வர வேண்டும்.
பார்க்கிங் 2 மற்றும் 3-க்கு வரும் வாகனங்கள்:
சென்னை, விழுப்புரம், வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை: திருச்சி, விராலிமலை, மேலூர், விரகனூர் சுற்றுச்சாலை, அருப்புக்கோட்டை சந்திப்பு, பாரபத்தி வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும்.